எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ள சூழ்நிலையில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனைச் சீண்டும் விதமாக பாகிஸ்தான் டிவி ஒன்று நிறவெறி விளமபரத்தை வெளியிட்டுள்ளது.

தற்போது இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தனது முதல் இரண்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை வெற்றி கண்டு இந்தியா போட்டியை முன்னேற்றப் பாதையில் துவங்கியுள்ளது.

இந்தியா தனது நான்காவது போட்டியில் பாகிஸ்தானை வருகின்ற 16-ஆம் தேதி ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் சந்திக்க உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.

இந்நிலையில் இந்தப் போட்டி தொடர்பாக இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனைச் சீண்டும் விதமாக பாகிஸ்தான் டிவி ஒன்று நிறவெறி விளமபரத்தை வெளியிட்டுள்ளது.

பிப்ரவரியில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா விமானப் படையானது பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அடுத்த சில நாட்களில் பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தன.

இதில் ஈடுபட்ட அந்நாட்டு விமானங்களை துரத்தி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய போர் விமானம் ஒன்றானது பாகிஸ்தான் நாட்டு எல்லையில் வீழ்த்தப்பட்டது. அதை இயக்கிய விமானி விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் இந்திய அரசின் தொடர் முயற்சியின் காரணமாக இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டார். ஆனால் பாகிஸ்தான் பிடியில் இருந்த போது அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து விடியோ ஒன்று பாகிஸ்தான் ராணுவத்தால் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகப் பரவியது.

Indian and Pakistan (R) players line up for the national anthem just before the start of the one day international (ODI) Asia Cup cricket match between Pakistan and India at the Dubai International Cricket Stadium in Dubai on September 19, 2018. (Photo by ISHARA S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

தற்போது பாகிஸ்தானில் உலகக் கோப்பை போட்டிகளை ஜாஸ் டிவி ஒளிபரப்பி வருகிறது. இதற்காக முன்னோட்டமாக அந்த டிவி விளமபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஒரு நபர் விமானி அபிநந்தனைப் போலவே ‘ஹேண்டில்பார் வடிவ’ மீசையுடன சித்தரிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் கருப்பு நிறத்தில் இருப்பவர் போன்று ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் உடை நிறமான நீல நிற உடை அணிவிக்கப்பட்டுள்ளது. கையில் தேநீர் கோப்பையுடன் இருக்கும் அவரிடம் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்கு அவர் அபிநந்தனின் புகழ்பெற்ற பதிலான “I’m sorry, I am not supposed to tell you this.” என்பதையே பதிலாக அழைக்கிறார்.

இறுதியில் அவரை போகச் சொல்லும் போது அவர்கள் கிண்டல் செய்வதுடன் விளம்பரம் முடிவடைகிறது. ஒரு முக்கியமான விஷயத்தை பொறுப்புணர்வு இன்றிக் கையாண்டிருப்பதாக விமர்சித்து இணையத்தில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதை நீக்குமாறு கோரி எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன.

 

  • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...