2003, 2007-இல் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது போல் தற்போதைய உலகக் கோப்பையில் இந்தியாவும் ஆதிக்கம் செலுத்தும் என மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அஸ்வின் பவுண்டேஷன் அமைப்பை அவர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் இளம் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து உதவி செய்ய அஸ்வின் திட்டமிட்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
சஹல், குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக தான் செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய போட்டியில் சஹல் சிறப்பாக வீசி வருகிறார். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க வெற்றிகளை நாம் பெற்றுள்ளோம். ஆப் ஸ்பின்னர்களுக்கு தற்போது வாய்ப்பில்லையே என கேட்டபோது, அவர் கூறுகையில், இந்த நிலை விரைவில் மாறும். வலது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளதால், இடதுகை ஸ்பின்னர்களும் ஏராளம் தேவைப்படுகின்றனர். குறுகிய ஓவர் ஆட்டங்களில் ஆப் ஸ்பின்னர்கள் தேவை குறைந்துள்ளது. அதே நேரம் ஐபிஎல் போட்டியில் நானும், ஹர்பஜனும் சிறப்பாக செயல்பட்டோம். கவுண்டி அணியான நாட்டிங்ஹாம்ஷயர் அணியில் ஆடுவதற்காக வரும் 23-ஆம் தேதி இங்கிலாந்து செல்கிறேன். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள பொருளாதார வசதியில்லாத குழந்தைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதி, நிதிவசதி செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.
மேலும் தேர்வு செய்யப்பட்ட 8 இளம் வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள், ஊக்கத்தொகையை அஸ்வின் மனைவி ப்ரீத்தி வழங்கினார்.

இந்திய அணி, அடுத்து மோத இருக்கும் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் மட்டுமே தவான் ஆட மாட்டார் என்றும் அதற்குள் காயம் குணமாகி விட்டால், அடுத்து நடக்கும் போட்டியில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாற்று வீரராக, ரிஷாப் பன்ட்-டை கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்துக்கு அனுப்புகிறது. அவர் இன்று அல்லது நாளை அங்கு சென்று சேர்கிறார். ரிஷாப்பை அதிகார பூர்வ மாற்றுவீரராக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்தால், தவான் விரைவில் குணம் அடைந்தாலும் உலக கோப்பை போட்டியில் விளையாட முடியாது. அணியில் உள்ள மற்ற வீரர் யாராவது காயமாகி வெளியேறினால் தான் அவரை அணியில் மீண்டும் சேர்க்க முடியும் என்பதால், ரிஷாப்பை மாற்று வீரராக அறிவிக்கவில்லை.

இதற்கிடையே, தவானுக்கு பதிலாக கே.எல்.ராகுலை, தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நான்காவது இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...