ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மீதான குற்றச்சாட்டுப் பதிவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக உத்தம் சி.ஜெயின், கெüதம்சந்த் நிமானி, மகாவீர் சந்த், பாப்பு உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி ரூ.1 கோடியே 35 லட்சத்தை லஞ்சமாகப் பெற்ற நேமிசந்த், ஹிராகுமார், மகேந்திரசிங் ரங்கா ஆகியோர் அதில் ரூ.60 லட்சத்தினை, வழக்கை விசாரித்த கியூ பிரிவு ஐ.பி.எஸ்.,அதிகாரி சம்பத்குமாருக்கு வழங்கி உள்ளனர்.

David Warner of Sunrisers Hyderabad and Wriddhiman Saha of Sunrisers Hyderabad during match 48 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Sunrisers Hyderabad and the Kings XI Punjab held at the Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad on the 29th April 2019
Photo by: Vipin Pawar /SPORTZPICS for BCCI

இதுகுறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இதனை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் கடந்த 2015-ஆம் ஆண்டு உறுதி செய்தது. இதனை எதிர்த்து சம்பத்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரியான சம்பத்குமார் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்வதற்கு முன்பாக தமிழக உள்துறை அமைச்சகத்திடம் முறையான முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

Hyderabad: Sunrisers Hyderabad’s Mohammad Nabi celebrates fall of AB de Villier’s wicket during the 11th IPL 2019 match between Sunrisers Hyderabad and Royal Challengers Bangalore at Rajiv Gandhi International Stadium in Hyderabad on March 31, 2019. (Photo: IANS)

ஆனால் காவல்துறை அதிகாரிகள் முன் அனுமதி பெறாமல் அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவினை செய்துள்ளனர். எனவே இந்த குற்றச்சாட்டுப் பதிவு ரத்து செய்யப்படுகிறது. அதே நேரம், இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக மாநில உள்துறை அமைச்சகத்திடம் முறையாக அனுமதி பெற்று அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...