உலகக் கோப்பை தொடரில், ஸ்டம்பில் பந்து பட்டாலும் பெய்ல்ஸ் கீழே விழாததால், எல் இ டி பெய்ல்ஸ்-ஐ நீக்க வேண்டும் என்ற விராத் கோலி, ஆரோன் பின்ச் ஆகியோரின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.

தற்போது நடக்கும் உலகக் கோப்பை தொடரில், எல்இடி பெய்ல்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நடுவர்களுக்கான வேலையை எளிதாக்கு கின்றன. இந்த பெய்ல்ஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு உலக கோப்பை தொடரில் பந்து ஸ்டம்பை தாக்கியும் பெய்ல்ஸ் கீழே விழாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் இருக்கும்போது, பும்ரா வீசிய பந்து, ஸ்டம்பில் தாக்கியது. பெய்ல்ஸ் விழாததால் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார். இதே போல, இந்த உலகக் கோப்பைத் தொடரில் 10 முறை பந்து, ஸ்டெம்பை தாக்கியும் பெய்ல்ஸ் விழவில்லை. இதனால் பந்துவீச்சாளர்களும் கேப்டன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை நீக்க வேண்டும் என்று இந்திய கேப்டன் விராத் கோலி, ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்டது. ‘’தற்போது உலகக் கோப்பை போட்டிகள் மத்திய கட்டத்தை எட்டியுள்ளன. இப்போது எல் இ டி பெய்ல்ஸில் மாற்றம் செய்தால், போட்டியின் நம்பகத்தன்மை கேள்விகுறியாகிவிடும். 2015 உலகக் கோப்பைப் போட்டியில் இருந்தே இந்த பெய்ல்ஸ்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது’’ என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் பந்து படும் போது, எல்இடி பெயில்ஸ்கள் ஒளிர்கின்றன. இது டிவி நடுவர்களின் பணியை எளிதாகியுள்ளது. ஆனால் பலமுறை இதில் முடிவுகள் தெளிவாக இல்லை என தகவல்கள் வெளியாகின. இந்த பெயில்ஸ்களை மாற்ற வேண்டும் என விராட் கோலி, ஆஸி. கேப்டன் ஆரோன் பின்ச் கடந்த ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினர்.


தற்போது உலகக் போட்டிகள் மத்திய கட்டத்தை எட்டியுள்ளன. இடையில் எல்இடி பெயில்ஸ்களை மாற்ற முடியாது. அவ்வாறு செய்தால், போட்டியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகி விடும்.

10 அணிகள் ஆடும் 48 ஆட்டங்களிலும் ஓரே கருவி தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த உலகக் கோப்பையில் ஸ்டம்புகளின் மீது 10 முறை பந்து பட்டும், பெயில்கள் கீழே விழவில்லை. அதில் ஏராளமான வயர்கள் பயன்படுத்தப்பட்டு, கனமாக உள்ளதால், பெயில்கள் விழுவதில்லை  எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது. • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...