தனது மாமியார் காலமானதால், நாடு திரும்பினார் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லஸித் மலிங்கா.
டான்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த இலங்கை-வங்கதேச அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் முழுமையாக கைவிடப்பட்டது. இந்நிலையில் அவரது மாமியார் காலமானதாக கிடைத்த தகவலை அடுத்து உடனே நாடு திரும்பினார் மலிங்கா. அடுத்து வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஆட்டத்தில் மலிங்கா பங்கேற்பார் எனத் தெரிகிறது.

CARDIFF, WALES – JUNE 04: Sri Lanka bowler Lasith Malinga celebrates after bowling Dawlat Zadran of Afghanistan during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Afghanstan and Sri Lanka at Cardiff Wales Stadium on June 04, 2019 in Cardiff, Wales. (Photo by Stu Forster-IDI/IDI via Getty Images)

மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயம்: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தின் போது ஆஸி. ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயமுற்றதால், அடுத்த முக்கியமான பாகிஸ்தானுடன் நடைபெறும் ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மிச்செல் மார்ஷ் இடம் பெறுகிறார். எத்தனை ஆட்டங்களில் ஸ்டாய்னிஸ் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படவில்லை.இலங்கை-வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால்  முழுமையாக கைவிடப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்தது.
இலங்கை அணி 3 ஆட்டங்களில் தலா 1 வெற்றி, 1 தோல்வியைப் பெற்றது. மேலும் ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு முடிவின்றி கைவிடப்பட்டது. 3 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ளது.

CARDIFF, WALES – JUNE 04: Lasith Malinga (C) of Sri Lanka is congratulated by team mates after taking the wicket Mohammad Shahzad during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Afghanistan and Sri Lanka at Cardiff Wales Stadium on June 04, 2019 in Cardiff, Wales. (Photo by David Rogers/Getty Images)

அதே நேரத்தில் 3 ஆட்டங்களில் ஆடிய வங்கதேசம், 1 வெற்றி, 2 தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்தில் உள்ளது. போட்டியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது 2 அணிகளுக்கு கட்டாயமாகும். இந்நிலையில் டாஸ் கூட வீசப்படாத நிலையில் பலத்த மழை பெய்தது.
நடுவர்கள், இரு அணிகளின் கேப்டன்கள் மைதானம் மற்றும் பிட்சில் சென்று ஆய்வுசெய்தனர். எனினும் மழை தொடர்ந்து பெய்தததாலும், நீர் தேங்கியதாலும், ஓவர்களை குறைத்தும் ஆட்டத்தை நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து இலங்கை-வங்கதேசம் இடையிலான ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி: இதைத் தொடர்ந்து இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இலங்கை 4 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும், வங்கதேசம் 3 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும் உள்ளன.
கைவிடப்பட்ட 3-ஆவது ஆட்டம்: 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் மழை பாதிப்பால் கைவிடப்படும் மூன்றாவது ஆட்டம் இதுவாகும். அதே நேரத்தில் இலங்கைக்கு இது 2-ஆவது ஆட்டமாகும். • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...