நியூஸி வேகத்தை சமாளிக்குமா இலங்கை! உலககோப்பை போட்டியில் இன்று மோதல்! 1

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது நாளான இன்று கார்டிப் நகரில் பிற்பகலில் நடைபெறும் ஆட்டத்தில் நியூஸிலாந்து – இலங்கை அணிகள் மோதுகின்றன.

6 முறை அரை இறுதி ஆட்டங்களில் தோல்வியடைந்த நியூஸிலாந்து அணி கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பிரண்டன் மெக்கலம் தலைமையில் இறுதிப் போட்டியில் முதன்முறையாக கால்பதித்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதன் பின்னர் மெக்கலம் ஓய்வு பெற கேப்டன் பொறுப்பை ஏற்ற கேன் வில்லியம்சன் அணியை அபாரமாக வழிநடத்தி வருகிறார்.

முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை 179 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி, அதன் பின்னர் 2-வது பயிற்சி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 421 ரன்களை துரத்திய நிலையில் 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இந்திய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டிரென்ட் போல்ட், ஜிம்மி நிஷாம் ஆகியோர் பந்து வீச்சில் கவனத்தை ஈர்த்தனர். அதேவேளையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இன்னும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆகாத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டாம் பிளெண்டல் 89 பந்துகளில் 106 ரன்கள் விளாசி அணியின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.நியூஸி வேகத்தை சமாளிக்குமா இலங்கை! உலககோப்பை போட்டியில் இன்று மோதல்! 2

இவரை தவிர்த்து கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இதில் ராஸ் டெய்லர் கடந்த சில ஆண்டுகளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு அவரது சராசரி 60 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு இது 90 வரை நெருங்கியது. தொடக்க வீரர்களான மார்ட்டின் கப்தில், காலின் மன்றோ ஆகியோர் அதிரடியாக மட்டையை சுழற்றக்கூடியவர்கள்.

பந்து வீச்சு துறையில் டிரென்ட் போல்ட்டின் ஸ்விங், எதிரணிக்கு கடும் சவால்தரக்கூடும். அவருடன் டிம் சவுதி மற்றும் முப்பரிமான திறன்களை கொண்ட காலின் டி கிராண்ட்ஹோம், ஜிம்மி நீஷாம் ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடியவர்கள். சுழற்பந்து வீச்சில் இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

1996-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியானது இம்முறை புதிதாகநியமிக்கப்பட்டுள்ள கேப்டனான திமுத் கருணாரத்னே தலைமையில் களமிறங்குகிறது. கருணாரத்னே, 4 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் ஒருநாள் போட்டி கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார். இலங்கை அணி கடைசியாக பங்கேற்ற 9 ஆட்டங்களில் 8-ல் தோல்வியடைந்த நிலையில் உலகக் கோப்பை தொடரை சந்திக்கிறது.

பயிற்சி ஆட்டங்களிலும் இலங்கை அணி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறியது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளிடம் தோல்வியடைந்தது. இந்த இரு ஆட்டங்களிலும் நேர்மறையான விஷயம் என்னவெனில் திமுத் கருணாரத்னேவும், ஏஞ்சலோ மேத்யூஸும் அரை சதம் அடித்ததுதான்.

இலங்கை அணியின் தற்போதைய பார்மும் கவலையளிக்கும் வகையில் இருந்தாலும் முந்தைய உலகக் கோப்பை தொடர்களில் அந்த அணியின் சாதனைகளை சற்று ஈர்க்கும் வகையிலேயே உள்ளது. 1996-ல் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி அதன் பின்னர் இருமுறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, மேலும் ஒரு முறை அரை இறுதி வரை கால்பதித்திருந்தது.நியூஸி வேகத்தை சமாளிக்குமா இலங்கை! உலககோப்பை போட்டியில் இன்று மோதல்! 3

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அணிக்கு தேவையானது கேப்டனிடம் இருந்து போதிய அளவிலான ஊக்கமும், சரியான வழிநடத்தலும்தான். இதை கருணாரத்னே சிறப்பாக செய்யக்கூடும் என அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும் சீனியர் வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ், லஷித் மலிங்கா ஆகியோர் அணிக்கு பெரிய அளவில் பங்களிப்பு செய்யும் பட்சத்தில் இலங்கை அணி தொடரை வெற்றியுடன் தொடங்க வாய்ப்புள்ளது.

அதேவேளையில் கடந்த உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திதான் தொடரை சிறப்பாக தொடங்கியிருந்தது. அதேபோன்ற வகையிலான உயர்மட்ட செயல்திறனை தற்போதும் பிரதிபலிக்கச் செய்வதில் நியூஸிலாந்து வீரர்கள் முனைப்பு காட்டக்கூடும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *