ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முடிய இங்கிலாந்து அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் அம்பலமாகிப் போயுள்ளது.

பாகிஸ்தானிடம் வாங்கிய உதை பிறகு இலங்கையுடன் குறைந்த ஓவர் போட்டியிலும் தொடர நேற்று ஆஸ்திரேலியா இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பின் மீது இன்னொரு ஆணியறைந்தது.

மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி அலைசா ஸ்டார்க் தன் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டார்க் காலையில் அணி தங்கியிருக்கும் ஹோட்டலில் அழையா விருந்தாளி ஒருவரை எதிர்கொள்ள அவர் ஸ்டார்க் எடுத்துக் கொள்ள உணவு பற்றி சில வார்த்தைகளைக் கூறியதோடு முழங்கையில் ஸ்டார்க் போட்டிருந்த ஸ்ட்ராப் பற்றியும் சில வார்த்தைகளைக் கூறியுள்ளார், இது ஸ்டார்க்கைத் தூண்டியதாக மனைவி அலைசா ஸ்டார்க் கூறியுள்ளார்.

நேற்று 285 ரன்கள் இலக்கை விரட்டிய இங்கிலாந்து 45வது ஓவரில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்ததோடு  உலகக்கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் அணியாக ஆஸ்திரேலியாவை ஆக்கியது. பெஹெண்டார்ட்ப் துல்லிய யார்க்கரில் வின்ஸ் விக்கெட்டை 2வது பந்தில் காலி செய்து தொடங்க, இடையில் 115 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 89 ரன்கள் எடுத்த பென் ஸ்டோக்ஸ் தனி மனிதனாக போராடிக் கொண்டிருந்த போது மிட்செல் ஸ்டார்க் வீசிய யார்க்கர், ஜொயெல் கார்னர் வீசும் யார்க்கர் ரகம்.

நேராகக் கொண்டு வந்து கையையே ஸ்டம்புக்கு அடிப்பாகத்தில் இறக்கியது போன்ற ஒரு பந்து, ஒன்றுமே செய்ய முடியாது, எவ்வளவு பெரிய ப்ளேயராக இருந்தாலும் சரி. அத்தோடு இங்கிலாந்தின் அசாத்திய வெற்றி வாய்ப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க் அந்தக் காலைச் சம்பவம் குறித்து கூறும்போது, “யாரோ ஒருவர் வந்தார், என் கையில் உள்ள ஸ்ட்ராப் பற்றியும் என் பவுலிங் பற்றியும் ஏதோ கேலியாகப் பேசினார், எனக்குப் பசி, என் கை ஸ்ட்ராப் மற்றும் நான் சாப்பிட்ட உணவைப் பார்த்து அவர் சிரித்தார். இது ஒரு நல்ல கேளிக்கைதான். ரசிகர்களுடன் மைதானத்திலும், விடுதியிலும் இந்த உலகக்கோப்பை  முழுதுமே நல்ல கேளிக்கை.. இவையெல்லாம் மிகவும் சகஜமானவை.

பென் ஸ்டோக்ஸ் மிக அருமையான வீரர், இலங்கைக்கு எதிராக தனிநபராக அவர் வெற்றி பெறச் செய்திருப்பார், அந்த இன்னிங்ஸைப் பார்த்தோம். அதனால்தான் அவர் ஆடும்போது நாங்கள் நிம்மதியிழந்தோம், அவர் விக்கெட்டை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று முனைப்பு காட்டினோம். ஆனால் அதிர்ஷ்டகரமாக ஒன்று அவரை மீறி உள்ளே புகுந்தது. அந்த யார்க்கரை எப்படி செலுத்த வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியே அது விழுந்தது. இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது” என்றார். • SHARE

  விவரம் காண

  இவர்தான் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் – கசிந்த தகவல்

  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு யார் வரப்போகிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்தியன் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ரவிசாஸ்திரியின்...

  தோனியை கிண்டலடிக்க உனக்கு என்ன தகுதி? இங்கிலாந்து வீரரை விளாசிய ரசிகர்கள்!!

  தோனியின் இராணுவ முடிவு குறித்து கிண்டலடித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர்கள் டேவிட் லாய்டை ட்விட்டரில் பொரிந்து தள்ளியுள்ளனர் ரசிகர்கள். உலகக் கோப்பை...

  இவரெல்லாம் ராணுவத்துக்கு போறாரா? தோனியை கிண்டலாகப் பேசிய இங்கிலாந்து வீரர்!!

  இவரெல்லாம் ராணுவத்துக்கு போறாரா? என்ற வண்ணம் தோனியை கிண்டலடித்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர் டேவிட் லாய்டு. உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு...

  சத்தியமா அதுக்கு கே.எல் ராகுல் தான் காரணம்; உண்மையை உடைத்த தேர்வுக்குழு தலைவர் !!

  சத்தியமா அதுக்கு கே.எல் ராகுல் தான் காரணம்; உண்மையை உடைத்த தேர்வுக்குழு தலைவர் கே.எல் ராகுல் கேட்டு கொண்டதற்காகவே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய...

  சுப்மன் கில்லிற்கு ஏன் இடம் இல்லை..? புதிய விளக்கம் கொடுக்கும் எம்.எஸ். கே பிரசாத் !!

  சுப்மன் கில்லிற்கு ஏன் இடம் இல்லை..? புதிய விளக்கம் கொடுக்கும் எம்.எஸ். கே பிரசாத் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3...