டாஸ் வென்ற நியுஸி அணி பந்துவீச தேர்வு செய்துள்ளது! அணி விவரம் உள்ளே! 1

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. கார்டிஃப் நகரில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது. மற்றொரு போட்டியில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி- ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது. பிரிஸ்டல் நகரில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி மாலை ஆறு மணிக்குத் தொடங்குகிறது.

அணிகள்:

இலங்கை: கருணாரத்ன , லஹிரு திரிமன்ன, குஷல் பெரேரா, குஷல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சயன் டி சில்வா, திஸர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், சுரங்க லக்மால், இசுரு உதான, லசித் மலிங்கா

நியூசிலாந்து : மார்ட்டின் குப்டில், கொலின் முர்ரோ, கேன் வில்லியம்சன் , டாம் லதாம் , ரோஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், லாக்ஸி பெர்குசன், மேட் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட்

டாஸ் வென்ற நியுஸி அணி பந்துவீச தேர்வு செய்துள்ளது! அணி விவரம் உள்ளே! 2

இலங்கை அணி, சமீப காலமாக, தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. தனது கடைசி 9 ஒரு நாள் போட்டியில் 8-ல் தோல்வியை சந்தித்துள்ளது. உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளிலும் அந்த அணி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை அது இன்று எதிர்கொள்கிறது. அந்த அணியில் அனுபவ வீரர் மலிங்கா, சுரங்கா லக்மல், ஜெப்ரே வாண்டர்சே ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வாய்ப்பிருக்கிறது.  பேட்டிங்கில், கேப்டன் கருணாரத்னே, திரிமன்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அனுபவ வீரர் மேத்யூஸ், திசரா பெரேரா ஆகியோர் நின்று ஆடினால் இன்றைய போட்டியில் வெற்றி பெறலாம்.

டாஸ் வென்ற நியுஸி அணி பந்துவீச தேர்வு செய்துள்ளது! அணி விவரம் உள்ளே! 3

நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஃபார்மில் இருக்கிறது. கப்தில், ராஸ் டெய்லர், வில்லியம்சன் ஆகியோர் அசத்துகின்றனர். வேகப்பந்துவீச்சில், போல்ட், டிம் சவுதி, சுழற்பந்துவீச்சில் சான்ட்னர், சோதி ஆகியோர் சிறப்பாக விளையாடுகின்றனர்.
ரன் குவிப்புக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து மிரட்டும். அதை கட்டுப்படுத்த இலங்கை போராட வேண்டியிருக்கும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *