வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர் அறிவிப்பு: 2 முக்கிய இந்திய வீரர்களுக்கு ஓய்வு 1

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இப்போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் அணியில் இணைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரு பகுதியாக இப்போட்டிகள் கணக்கிடப்படும் என்பதால் இவர்கள் இருவரும் ‌அணியில் இணைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர் அறிவிப்பு: 2 முக்கிய இந்திய வீரர்களுக்கு ஓய்வு 2

இதில், முதலில் நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்படலாம் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தலா 3 ஆட்டங்கள் அடங்கிய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் கோலி மற்றும் பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்படலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து கோலி விளையாடி வருகிறார். பூம்ராவின் பணிச்சுமையும் அதிகமாக உள்ளது. அவர்கள் மீண்டும் டெஸ்ட் தொடருக்கு அணியில் இணைவார்கள்.

முதல் டெஸ்ட் ஆட்டம், ஆண்டிகுவாவில் ஆகஸ்ட் 22-ஆம் தேதியே தொடங்குவதால், அதற்குள் உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள முக்கியமான வீரர்களுக்கு ஓய்விற்கான போதிய நேரம் கிடைக்கும்” என்றார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர் அறிவிப்பு: 2 முக்கிய இந்திய வீரர்களுக்கு ஓய்வு 3
India’s bowlers Mohammed Shami (L) and Jasprit Bumrah attend a training session at the Rose Bowl in Southampton, southern England, on June 20, 2019, ahead of their 2019 World Cup cricket match against Afghanistan. (Photo by Saeed KHAN / AFP) (Photo credit should read SAEED KHAN/AFP/Getty Images)

முழு அட்டவணை

1 வது டி 20 ஐ – ஆகஸ்ட் 3, புளோரிடா, அமெரிக்கா

2 வது டி 20 ஐ – ஆகஸ்ட் 4, புளோரிடா, அமெரிக்கா

3 வது டி 20 ஐ – ஆகஸ்ட் 6, கயானா, மேற்கு இந்தியா

1 வது ஒருநாள் – ஆகஸ்ட் 8, கயானா, மேற்கிந்திய தீவுகள்

2 வது ஒருநாள் – ஆகஸ்ட் 11, டிரினிடாட், மேற்கிந்திய தீவுகள்

3 வது ஒருநாள் – ஆகஸ்ட் 14, டிரினிடாட், மேற்கிந்திய தீவுகள்

1 வது டெஸ்ட் – ஆகஸ்ட் 22-26, ஆன்டிகுவா, மேற்கு இந்தியா

2 வது டெஸ்ட் – ஆகஸ்ட் 30-செப்டம்பர் 3, ஜமைக்கா, மேற்கிந்திய தீவுகள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *