இங்கிலாந்து – வேல்ஸ் நகரங்களில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றது ஆஸ்திரேலியா. நேற்று இங்கிலாந்துடனான லீக் போட்டியில் வெற்றிப் பெற்றது மூலம் தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது ஆஸ்திரேலியா. இதனையடுத்து இந்த வாரம் பல முக்கியப் போட்டிகள் நடைபெறவுள்ளதால் உலகக் கோப்பை அரையிறுதியில் அடுத்தடுத்து இடம்பெறப் போகும் மூன்று அணிகள் எவை என தெரிந்தவிடும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

வீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்! 1

உலகக் கோப்பை தொடரின் 32வது லீக் போட்டி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை இடையே நடைபெற்றது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீசியது. இதனால் முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் சதம் அடித்து அசத்தினார்.மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அரை அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி கிரிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்! 2

இதைத்தொடர்ந்து 2வது பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் வின்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் 0 (2) அவுட் ஆகினார். அவரைத் தொடர்ந்து நம்பிக்கை ஆட்டக்காரர் ஜோ ரூட் 8 (9) ரன்களில் வெளியேற, பின்னர் வந்த கேப்டன் மார்கன் 4 (4) ரன்களிலேயே நடையைக் கட்டினார். சிறிது நேரம் நிலைத்து விளையாடிய பேரிஸ்டோவ்-ம் 27 (39) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

வீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்! 3
Australias Jason Behrendorff celebrates with his team-mates after taking the wicket of Englands Chris Woakes (not in picture) during the ICC Cricket World Cup group stage match at Lord’s, London. (Photo by Adam Davy/PA Images via Getty Images)

 

இதையடுத்து வந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 89 (115) குவித்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் வந்தவர்கள் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி ஜாசன் பெரெண்ட்ராஃப் 5 விக்கெட்டுகளையும், மிட்ஜெல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
  • SHARE

  விவரம் காண

  சச்சினை போன்று பாஸ்கிதான் அணியில் அறிமுகம் ஆகும் இளம் வீரர்!

  பாகிஸ்தானைச் சேர்ந்த நசீம் ஷா என்ற 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட்...

  மீண்டும் வரும் தல தோனி: இன்று அணி அறிவிப்பு! ரசிகர்கள் ஜாலி!

  டிசம்பர் மாதம் நடக்க உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் அந்தத் தொடர்...

  பகலிரவு டெஸ்ட் போட்டியை காண இவர்களெல்லாம் வருகிறார்கள்: கங்குலி அறிவிப்பு

  மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தைக் காண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்கள் சச்சின், கபில்...

  பிங்க் பந்து டெஸ்ட் போட்டி: பிசிசிஐ தலைவர் கங்குலி வெளியிட்ட புதிய செய்தி

  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கான முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன. இந்தியா - வங்காளதேசம்...

  இப்போதைக்கு ஓய்வு இல்லை: யு டர்ன் அடித்த நட்சத்திர வீரர்! ரசிகர்கள் ஜாலி!

  டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்குப்பின் ஓய்வு பெறுவேன் என்று தெரிவித்திருந்த மலிங்கா, தற்போது அதில் இருந்து பின்வாங்கியுள்ளார். இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்...