2016ஆம் ஆண்டு இந்திய அணி அனுப்பிய கிரிக்கெட் ‘கிட்’-ஐ தொட்டுப்பார்த்து யுவராஜ் சிங் அழுததாக அவரது மனைவி உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நேற்று தனது ஓய்வை அறிவித்தார். சர்வதேச போட்டிகளில் இருந்த அவர் ஓய்வுப் பெறுவதாக வெளியிட்ட அறிவிப்பு அவரது ரசிகர்கள் கலங்கடித்தது. இந்திய அணி கிரிக்கெட் வீரர்களில் சச்சின், கங்குலி, தோனி ஆகியோருக்கு சற்றும் சளைக்காத வகையில் யுவராஜ் சிங்கிற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

 

இந்திய அணியின் உலகக் கோப்பை அணியின் அறிவிப்பு வெளியாகியபோது, யுவராஜ் சிங்கை உலகக் கோப்பை அணியில் சேர்த்திருக்காலம் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். முன்னதாக, புற்றுநோய் பாதிப்பால் யுவராஜ் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகினார். அதன்பின்னர் 2016ஆம் ஆஸ்திரேயாவிற்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார்.

அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ள யுவராஜ் சிங் மனைவி ஹஷெல் கீச்,

கிரிக்கெட்டில் இருந்து எனது கணவர் ஓய்வு பெறுவது தொடர்பான முடிவில் ஒரு மனைவியாக என்னால் தலையிட முடியாது. அவருடைய இந்த முடிவில் எனது முழு ஆதரவு உண்டு. மேலும் புற்றுநோய் விவகாரத்தில் யுவராஜை அனைவரும் போராடி வெற்றி பெற்றவராக முத்திரை குத்திவிட்டனர்.

யாராலும் எந்த நோயில் இருந்தும் மீண்டு, குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். எனவே அதுபோன்ற கடின வாழ்க்கையை வாழும் அனைவரும் போராளி என்று மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதை அவர்களால் எளிதில் தூக்கி வீச முடியாது. யுவராஜுக்கு அதுபோன்ற ஒரு நினைப்பு என்றுமே இருந்ததில்லை.

“ஒரு மனைவியாக அவரிடம் கிரிக்கெட் பிரிவு பற்றி அவரிடம் என்ன சொல்ல முடியும். அவர் ஓய்வு பெற்றதற்கு எனது முழு ஆதரவை அளித்துள்ளேன். யுவராஜ் சிங்கை பார்ப்பதற்கு முன்பு வரை நான் கிரிக்கெட் பார்த்ததில்லை. 2016ஆம் யுவராஜை மீண்டும் அணிக்காக விளையாடுமாறு இந்திய அணி கிட் அனுப்பினர். அதைக்கண்ட யுவராஜ் அழுதார். அவரது உணர்ச்சிகளை அப்போது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதை கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும் என நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணி முக்கிய கோப்பைகளை வெல்ல எனது மகன் காரணமாக இருந்தார். தனது கிரிக்கெட் வாழ்வில் யுவராஜ் இந்திய அணியை பெருமைப்பட வைத்துள்ளார். சிறந்த கிரிக்கெட் வீரராக திகழந்துள்ளார். ஓய்வு என்பது தனிப்பட்ட முடிவு. ஒரு தாயாக என்னால் யுவராஜின் பின்னிருந்து தட்டிக்கொடுக்க மட்டும்தான் முடியும் என்று அவரது தாயார் ஷப்னம் சிங் தெரிவித்தார். • SHARE

  விவரம் காண

  எண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார்.? விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு !!

  எண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார்.? விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள்...

  கரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..? மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை !!

  கரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..? மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று உள்ளன....

  புதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி !!

  புதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 10ம்...

  ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்..? சச்சின் டெண்டுல்கர் புது கருத்து !!

  ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்..? சச்சின் டெண்டுல்கர் புது கருத்து விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய...

  திட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை !!

  திட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை எங்கள் விளையாட்டின் மீது விமர்சனம் செய்யுங்கள், ஆனால், அத்துமீறி...