டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எங்களுடைய பேட்டிங் வெறித்தனமாக இருக்கும் ; இந்திய அணிக்கு சவால் விட்ட ஸ்டீவ் ஸ்மித் !! 1
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எங்களுடைய பேட்டிங் வெறித்தனமாக இருக்கும் ; இந்திய அணிக்கு சவால் விட்ட ஸ்டீவ் ஸ்மித்..

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எங்களுடைய பேட்டிங் மிகவும் வெறித்தனமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

2021-2023 டெஸ்ட் தொடருக்கான சாம்பியனை தீர்மானிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வருகிறது இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வருகிற ஜூன் 7ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எங்களுடைய பேட்டிங் வெறித்தனமாக இருக்கும் ; இந்திய அணிக்கு சவால் விட்ட ஸ்டீவ் ஸ்மித் !! 2

கடந்த முறை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் பரிதாபமாக தோல்வியை தழுவியது. இதன் காரணமாக எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியின் மேனிதான எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டத்திலும் அதிகமாக உள்ளது.

இதனால் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்தும், அதில் எந்த அணி வெற்றி பெறும்..? எந்த வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது போன்ற சுவாரஸ்யமான கருத்துக்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் விவாதித்து வருகின்றனர். அதேபோன்று இந்த தொடர் குறித்தான தங்களுடைய எதிர்பார்ப்புகளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எங்களுடைய பேட்டிங் வெறித்தனமாக இருக்கும் ; இந்திய அணிக்கு சவால் விட்ட ஸ்டீவ் ஸ்மித் !! 3

அந்தவகையில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நிச்சயம் எங்களது அணி மிக அதிரடியாக பேட்டிங் செய்யும் என்று உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில்.,“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் ஓவல் மைதானம் கிரிக்கெட் விளையாட மிகவும் சிறப்பான மைதானம், அந்த மைதானத்தில் அவுட்பில்ட் மின்னல் வேகத்தில் இருக்கும் மேலும் மொத்த மைதானமும் மிக சிறப்பாக உள்ளது,ஓவல் மைதானம் பேட்டிங்கிர்க்கு மிகவும் அருமையாக இருக்கும், பேட்ஸ்மேன் செட்டில் ஆகிவிட்டால் பந்தின் வேகமும் பவுன்சும் பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக இருக்கும்” என்று ஸ்டீவ் ஸ்மித் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *