ரொம்ப ஆச்சரியமா இருக்கு... இந்த பையன எப்படி எடுக்காம விட்டாங்கனே தெரியல; டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் !! 1
ரொம்ப ஆச்சரியமா இருக்கு… இந்த பையன எப்படி எடுக்காம விட்டாங்கனே தெரியல; டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் !!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சூரியகுமார் அணியிலிருந்து நீக்கப்பட்டது ஆச்சரியமளித்தாலும் இவர் அணியில் சேர்க்கப்பட்டது இந்திய அணிக்கு பலமாக அமைத்துள்ளது என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

டி.20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரை போன்று, டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டெஸ்ட் சாம்பியன்சிப் தொடர் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

ரொம்ப ஆச்சரியமா இருக்கு... இந்த பையன எப்படி எடுக்காம விட்டாங்கனே தெரியல; டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் !! 2

கடந்த வருட டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.

கடந்த டெஸ்ட் சாம்பியன்சிப் கோப்பையை தவறவிட்டாலும், அதன்பிறகு நடைபெற்ற அனைத்து டெஸ்ட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இந்த வருடத்திற்கான டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரிலும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.

ரொம்ப ஆச்சரியமா இருக்கு... இந்த பையன எப்படி எடுக்காம விட்டாங்கனே தெரியல; டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் !! 3

இந்திய அணியின் X-பேக்டர் இந்த இளம் வீரர்தான்..

இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் உலகத்தை சாம்பியன்ஷிப் போட்டிக்கான தன்னுடைய எதிர்பார்ப்புகளை செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக தெரியப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் காயம் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்பட்டு, அதற்கு பதில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தன்னுடைய கருத்தை தெரியப்படுத்தியுள்ளார்.மேலும் இந்த உலக சாம்பியன்ஸ் போட்டியில் சூரியகுமார் யாதவ் நீக்கப்பட்டது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருக்கிறார்.

ரொம்ப ஆச்சரியமா இருக்கு... இந்த பையன எப்படி எடுக்காம விட்டாங்கனே தெரியல; டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் !! 4

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் தெரிவித்ததாவது., “ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியில் சூரியக்குமார் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதற்கு பதில் இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டது இந்திய அணிக்கு X-பேக்டராக அமைந்துள்ளது. இஷான் கிஷன் கிட்டத்தட்ட ரிஷப் பன்ட் போன்று விளையாடக் கூடியவர். அவர் மிடில் ஆர்டரில் விளையாட கூடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ளார். இவர்களைப் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்”.

“இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் இது போன்ற ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணிக்கு எதிராக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு தான் முயற்சி செய்யும்” என்றும் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இஷான் கிஷன்

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜின்கியா ரஹானே, இஷான் கிஷன், கே.எஸ் பாரத், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனாத்கட்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *