டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சவுதாம்டன் மைதானத்தில் வரும் 18ம் தேதி டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்திய அணியால் முடியாது… நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும்; முன்னாள் இந்திய வீரர் சொல்கிறார் !! 2

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்காகவும், அதன்பின் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காகவும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிரமாக பயிற்சியும் எடுத்து வருகின்றனர். அதே போல் மறுபுறம் கிட்டத்தட்ட டி.20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இணையாக பார்க்கப்படும் இந்த இறுதி போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்திய அணியால் முடியாது… நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும்; முன்னாள் இந்திய வீரர் சொல்கிறார் !! 3

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர், அதே போல் இறுதி போட்டிக்கான தங்களது ஆடும் லெவனையும், கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் அஜித் அகார்கர், இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியால் முடியாது… நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும்; முன்னாள் இந்திய வீரர் சொல்கிறார் !! 4

மேலும் டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணிக்காக விராட் கோலி அதிகமான ரன்கள் குவித்து கொடுப்பார் என்றும், முகமது ஷமி மற்ற வீரர்களைவிட அதிக விக்கெட்டுகள் வீழ்த்துவார் என்றும் ஆரூடம் கூறியுள்ள அகார்கர், இறுதி போட்டிக்கான தனது ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான தனது ஆடும் லெவனின் துவக்க வீரர்களாக மாயன்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்யாத அகார்கர், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இளம் வீரர் சுப்மன் கில்லை தனது ஆடும் லெவனில் தேர்வு செய்யவில்லை.

இந்திய அணியால் முடியாது… நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும்; முன்னாள் இந்திய வீரர் சொல்கிறார் !! 5

அதே போல் மிடில் ஆர்டரில் சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி மற்றும் ரஹானே ஆகியோரை தேர்வு செய்துள்ள அகார்கர், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார்.

அதே போல் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரையுமே தேர்வு செய்துள்ள அகார்கர், பந்துவீச்சாளர்கள் வரிசையில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *