அணில் கும்ப்ளேவிற்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த தரமான சுழற்பந்து வீச்சாளர் இவர் தான்; பாராட்டும் முன்னாள் வீரர் !! 1

அணில் கும்ப்ளேவிற்கு பிறகு சிறந்த லெக் ஸ்பின்னர் என்றால் அது சஹால் தான் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட சஹால் நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுத்து மீண்டும் இந்திய அணியில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அணில் கும்ப்ளேவிற்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த தரமான சுழற்பந்து வீச்சாளர் இவர் தான்; பாராட்டும் முன்னாள் வீரர் !! 2

நீண்ட நாட்களுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் விளையாடிய சஹால் ஆரம்பத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பின் சிறந்த முறையில் பந்துவீசி இந்திய அணிக்காக இந்த தொடரில் 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற வரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கும் சஹால்(74விக்கெட்), எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிக முக்கிய பங்காற்றுவார் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி வருகின்றனர்.

அணில் கும்ப்ளேவிற்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த தரமான சுழற்பந்து வீச்சாளர் இவர் தான்; பாராட்டும் முன்னாள் வீரர் !! 3

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் அனில் கும்ப்ளேவிற்கு பிறகு சஹால் தான் சிறந்த லெக் ஸ்பின்னர் என்று வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.

அணில் கும்ப்ளேவிற்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த தரமான சுழற்பந்து வீச்சாளர் இவர் தான்; பாராட்டும் முன்னாள் வீரர் !! 4

இதுகுறித்து சஞ்சய் பங்கர் பேசுகையில், “ கடந்த உலக கோப்பை தொடரில் வாய்ப்பை இழந்த சஹால் நிச்சயம் எதிர்வரும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரும் துருப்பு சீட்டாக இருந்து வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார். மேலும் அனில் கும்ப்ளேவிற்கு பிறகு இந்திய அணியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒரே லெக் ஸ்பின்னர் என்றால் அது சஹால் தான், அதேபோன்று அனில் கும்ப்ளேவிற்கு பிறகு ரிஸ்ட் ஸ்பின்னில் (Wrist spin) அசத்தும் ஒரே வீரர் என்றால் அதுவும் சஹால் தான் என்று சஞ்சய் பங்கர் சஹாலை பாராட்டி பேசியிருந்தார்.

 

Leave a comment

Your email address will not be published.