நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க நினைத்தால் ஷர்துல் தாகூருக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரரான சரந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சவுதாம்டன் மைதானத்தில் வரும் 18ம் தேதி டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

முகமது சிராஜ் வேண்டாம்… இந்த சென்னை வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 2

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்காகவும், அதன்பின் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காகவும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிரமாக பயிற்சியும் எடுத்து வருகின்றனர். அதே போல் மறுபுறம் கிட்டத்தட்ட டி.20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இணையாக பார்க்கப்படும் இந்த இறுதி போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர், அதே போல் இறுதி போட்டிக்கான தங்களது ஆடும் லெவனையும், கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

முகமது சிராஜ் வேண்டாம்… இந்த சென்னை வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 3

இந்தநிலையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் தேர்வாளருமான சரந்தீப் சிங், இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க நினைத்தால் முகமது சிராஜிற்கு பதிலாக ஷர்துல் தாகூருக்கு இடம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முகமது சிராஜ் வேண்டாம்… இந்த சென்னை வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 4

இது குறித்து சரந்தீப் சிங் பேசுகையில், “ஆடுகளம் மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்க நினைத்தால், என்னுடைய தேர்வு ஷர்துல் தாகூராக தான் இருக்கும். சுழற்பந்து வீச்சாளராக அஸ்வினை அணியில் எடுக்க வேண்டும், ஜடேஜா அணிக்கு தேவைப்பட மாட்டார். கடந்த சில வருடங்களாகவே மிக சிறப்பாக பந்துவீசி வரும் ஷர்துல் தாகூரால் பந்தை ஸ்விங் செய்ய முடியும், சவுதாம்படன் மைதானம் ஷர்துல் தாகூரின் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *