ஸ்டீவ் ஸ்மித் மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால்....? மனம் திறக்கும் பயிற்சியாளர் !! 1

ஸ்டீவ் ஸ்மித் மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால்….? மனம் திறக்கும் பயிற்சியாளர்
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்மித், ஆஷஸ் தொடரில் செம கம்பேக் கொடுத்தார். 7 இன்னிங்ஸ்களில் 774 ரன்களை குவித்து மிரட்டிய ஸ்மித், ஆஸ்திரேலிய அணி பெற்ற 2 வெற்றிகளுக்கும் காரணமாக திகழ்ந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

ஒன்றரை ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிவைத்து, ஒரே தொடரில் முதலிடத்தில் இருந்த கோலியை பின்னுக்குத்தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துவிட்டார் ஸ்மித். ஆஷஸ் தொடரில் அவரது பேட்டிங் அபாரமாக இருந்தது. அவரை வீழ்த்துவதே இங்கிலாந்துக்கு பெரிய கஷ்டமாகிவிட்டது.

ஸ்டீவ் ஸ்மித் மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால்....? மனம் திறக்கும் பயிற்சியாளர் !! 2

இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அவர் தான் திகழ்ந்தார். ஸ்மித்தின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இந்த தொடரில் ஆடிய இன்னிங்ஸ்களும் அடங்கும். ஆஷஸ் தொடரில் டான் பிராட்மேனுக்கு அடுத்த வெற்றிகரமான வீரராக ஸ்மித் திகழ்கிறார். அந்தளவிற்கு தொடர்ச்சியாக அடித்து ரன்களை குவித்தார்.

ஆஷஸ் தொடரில் ஸ்மித்தின் பேட்டிங், கோலி – ஸ்மித் ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்கிற விவாதத்தை எழுப்பியுள்ளது. இப்படியிருக்க, ஸ்மித்தின் பேட்டிங் ஸ்டைல் மற்றும் பேட்டிங் டெக்னிக் ஒருசிலரால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஜாண்டி ரோட்ஸ் கூட, ஸ்மித்தின் பேட்டிங் டெக்னிக் மோசமானது என்றும் அவர் மோசமாக ஆடித்தான் சதங்களை அடிக்கிறார் என்றும் விமர்சித்திருந்தார்.

ஸ்டீவ் ஸ்மித் மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால்....? மனம் திறக்கும் பயிற்சியாளர் !! 3

ஸ்மித்தின் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைல், டெக்னிக் குறித்து பேசிய அவரது சிறுவயது பயிற்சியாளர் ட்ரெண்ட் உட்ஹில், தனித்துவமான அல்லது வித்தியாசமான ஸ்டைல், டெக்னிக்கை பெற்றிருந்தால், ஆஸ்திரேலியாவில் கடுமையாக போராட வேண்டியிருக்கும். வழக்கமான பேட்டிங் ஸ்டைலை கொண்ட அல்லது ஸ்டைலாக பேட்டிங் ஆடும் ஷான் மார்ஷ் போன்றோர் அடிக்கும் 30 ரன்னுக்கு இருக்கும் மரியாதை, வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலில் ஆடும் ஸ்மித் அடிக்கும் சதத்திற்கு கிடையாது.

ஸ்டீவ் ஸ்மித் மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால்....? மனம் திறக்கும் பயிற்சியாளர் !! 4

இதுவே ஸ்மித் இந்திய வீரராக இருந்திருந்தால், அவர் எப்படிப்பட்ட பேட்டிங் ஸ்டைல், டெக்னிக்கை கொண்டிருந்தாலும், நன்றாக ஆடினால் கொண்டாடப்பட்டிருப்பார். ஏனெனில் இந்திய கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் எப்படி வேண்டுமானாலும் ஆடு; ரிசல்ட் என்னவாக இருக்கிறது என்பதும் பேட்ஸ்மேன் ஸ்கோர் செய்கிறாரா என்பதற்கும்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுமே தவிர, அந்த வீரர் எப்படி பேட்டிங் செய்கிறார் என்பதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்கள். விராட் கோலி, கவாஸ்கர், ரோஹித் சர்மா, கங்குலி, சேவாக் ஆகிய அனைவருமே வித்தியாசமான பேட்டிங் டெக்னிக்கை கொண்டவர்கள் தான்.

ஆனால் ஆஸ்திரேலியாவில் அப்படியிருக்க முடியாது. இங்கு, நன்றாக ஸ்கோரும் செய்ய வேண்டும். அதேநேரத்தில் நல்ல பேட்டிங் டெக்னிக்கையும் கொண்டிருக்க வேண்டும் என்று ஸ்மித்தின் சிறுவயது பயிற்சியாளர் உட்ஹில் தெரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *