சின்ன பையன்... அவரதொந்தரவு பண்ணாதிங்க ; அர்ஜூன் டெண்டுல்கர்க்கு முன்னாள் இந்திய கேப்டன் ஆதரவு !! 1

அர்ஜுன் டெண்டுல்கரை அவருடைய போக்கில் விட்டுவிடுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

ஐந்து முறை டைட்டில் பட்டத்தை வென்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் அணி, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடி பிளே ஆப் சற்று கூட தகுதி பெறாமல் முதல் அணியாக போட்டியில் இருந்து வெளியேறியது.

சின்ன பையன்... அவரதொந்தரவு பண்ணாதிங்க ; அர்ஜூன் டெண்டுல்கர்க்கு முன்னாள் இந்திய கேப்டன் ஆதரவு !! 2

இதற்கு முக்கிய காரணம் மும்பை அணியின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் கேப்டன்ஷிப் என எதுவுமே சரியில்லை என்று முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், சொதப்பிய வீரர்களுக்கு பதில் அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்றும் மும்பை அணிக்கு ஆலோசனை கொடுத்து வந்தனர்.

 

இதன் பிரதிபலிப்பாக மும்பை அணி பிளேயர் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை என்ற நிலை எட்டியவுடன் அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தது, ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.சின்ன பையன்... அவரதொந்தரவு பண்ணாதிங்க ; அர்ஜூன் டெண்டுல்கர்க்கு முன்னாள் இந்திய கேப்டன் ஆதரவு !! 3

 

2022 ஐபிஎல் தொடரில் 30 லட்சம் தொகைக்கு மும்பை அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர், சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதாலே அணியில் எடுத்துள்ளார்கள் நிச்சயம் அவருக்கு விளையாட வாய்ப்பு அளிப்பார்கள் என்று தொடர் துவங்குவதற்கு முன்பே சிலர் விமர்சித்தனர்.

 

ஆனால் விமர்சித்தவர்களே அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று கூறியபோதும் மும்பை அணி வாய்ப்பளிக்கவில்லை.

 

மேலும் தொடர் முடிந்தவுடன் மும்பை அணி, ஏன் அர்ஜுனுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற காரணத்தையும் தெரிவித்திருந்தது.சின்ன பையன்... அவரதொந்தரவு பண்ணாதிங்க ; அர்ஜூன் டெண்டுல்கர்க்கு முன்னாள் இந்திய கேப்டன் ஆதரவு !! 4

 

அர்ஜுன் டெண்டுல்கரை நிம்மதியா விடுங்கள்….

 

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்க்கு இருக்கும் நெருக்கடி குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

 

அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து கபில் தேவ் பேசுகையில்,“சச்சின் டெண்டுல்கர் ஒரு ஜாம்பவான் அவருடைய திறமையை அவரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரிடம் எதிர்பார்க்கக்கூடாது, அர்ஜுன் டெண்டுல்கரை அவருடைய திறமைக்கேற்ப அவருடைய பங்களிப்பில் விளையாட வைக்க வேண்டும், சச்சின் செய்த சாதனையை 50% அவருடைய மகன் அர்ஜூன் டெண்டுல்கர் செய்தாலே அது அர்ஜூனின் மிகப்பெரிய சாதனையாக அமையும்”என்று கபில் தேவ், அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a comment

Your email address will not be published.