"தோல்வி குறித்து நிறைய பேசியாச்சு.. இனி வெல்வது எப்படினு பாப்போம்" - கேப்டன் விராத் கோஹ்லி!! 1

ஐபிஎல் தொடரில் 17வது போட்டியாக பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் இன்றைய போட்டி பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பார்திவ் படேல் மற்றும் விராத் கோஹ்லி சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். பெங்களூரு அணியின் கேப்டன் கோஹ்லி இம்முறை ஏமாற்றாமல் அணிக்கு தனது பங்களிப்பை கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தினார்.

"தோல்வி குறித்து நிறைய பேசியாச்சு.. இனி வெல்வது எப்படினு பாப்போம்" - கேப்டன் விராத் கோஹ்லி!! 2

முதல் மூன்று போட்டிகளில் நன்றாக ஆடிய பார்திவ் படேல் இம்முறை விரைவாக வெளியேற டி வில்லியர்ஸ் வந்து தனது அதிரடியை வெளிப்படுத்தி வான வேடிக்கை காட்டினார். இதனால் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர துவங்கியது.

கோஹ்லி 84 ரன்கள் எடுத்து வெளியேறினார். டி வில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக ஸ்டோனிஸ் சற்று அடிக்க 20 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி.

206 எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு நரேன் நல்ல துவக்கம் கொடுக்கவில்லை. ஆனால் அடுத்து வந்த ராபி லினுக்கு பக்கபலமாக இருக்க லின் அடுத்து துவம்சம் செய்தார்.

"தோல்வி குறித்து நிறைய பேசியாச்சு.. இனி வெல்வது எப்படினு பாப்போம்" - கேப்டன் விராத் கோஹ்லி!! 3

அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்ட லின் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த நிதிஸ் ராணா 37 மற்றும் கேப்டன் கார்த்திக் 19 ரன்களுக்கு வெளியேற 24 பந்துகளுக்கு 53 ரன்கள் தேவை என இருந்தது.

ஆனால் களத்தில் இருந்ததோ ரஸ்ஸல், மைதானத்தில் அனைத்து பக்கங்களிலும் பந்துகளை பறக்க விட்டு 5 பந்துகள் மீதம் வைத்து வென்று தந்துவிட்டார். 13 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார் ரஸ்ஸல்.

இந்த தோல்வி குறித்து கேப்டன் விராத் கோஹ்லி கூறுகையில், அங்கு எந்த யூகமும் இல்லை (அவர்கள் இழந்த இடம் பற்றி), நாங்கள் கடைசியாக நான்கு ஓவர்கள் மோசமாக பந்து வீசினோம், அது ஏற்கத்தக்கது அல்ல . நாம் இன்னும் புத்திசாலிதனமாக இருக்க வேண்டும், எதுவும் வரவில்லை மற்றும் நாங்கள் அழுத்தத்தின் கீழ் இருந்து மீளவில்லை. இதுவரை இந்த பருவத்தில் எங்கள் கதை எடுபடவில்லை. முக்கியமான ஓவர்களில் நீங்கள் போதுமான துணிச்சலுடன் பந்து வீசினால், ரஸ்ஸலைப் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களுக்கு எப்போதும் கடினமாக இருக்கும். நாங்கள் இதை போதுமென நினைத்தோம். ஆனால் 20-25 ரன்கள் இன்னும் தேவை. இறுதி நான்கு ஓவர்களில் நீங்கள் 75 ரன்களை காப்பாற்ற முடியாது என்றால், நீங்கள் 100 ரன்களை காப்பாற்ற முடியுமா என்று எனக்கு தெரியாது இது இதுவரை ஒரு ஏமாற்றமாக இருந்தது, ஆனால் நாங்கள் இன்னும் எங்கள் வாய்ப்புகளை பற்றி நம்பிக்கை உள்ளது. நாங்கள் விஷயங்களை திருப்புவோம் என்று நம்மை நம்ப வேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *