இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களை வார்த்தைகளால் சீண்டி கொண்டே இருந்த டிம் பெய்னை முன்னாள் வீரர் பிராட் ஹாக் விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.

நீ பேசுறதுக்கு எந்த தகுதியும் கிடையாது; டிம் பெய்ன் மீது முன்னாள் வீரர் காட்டம் !! 2

இரு அணிகளுக்கும் மிக முக்கியமான இந்த போட்டியில், 407 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணியால் எட்ட முடியாது என்றே ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்கள் கணித்தனர். இந்திய அணி 200 ரன்களை தாண்டுவதே கஷ்டம் என கருதப்பட்ட நிலையில், இளம் வீரரான ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். மறுமுனையில் புஜாராவும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பெரிதும் கை கொடுத்தார்.

ரிஷப் பண்ட், புஜாராவை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் திணறிய நிலையில், நாதன் லயோன் தனது மாயாஜால சுழல் மூலம் ரிஷப் பண்ட்டின் விக்கெட்டை கைப்பற்றினார். ரிஷப் பண்ட் விக்கெட்டை இழந்த அடுத்த சில நிமிடங்களில் புஜாராவும் விக்கெட்டை இழந்ததால் ஈஷியாக இந்திய அணியை வீழ்த்திவிடலாம் என ஆஸ்திரேலிய வீரர்கள் மனக்கோட்டை கட்டிய நிலையில், அடுத்ததாக களமிறங்கிய அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி புஜாராவை விட நிதானமாக ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொண்டு பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் தடுப்பாட்டம் ஆடினர்.

நீ பேசுறதுக்கு எந்த தகுதியும் கிடையாது; டிம் பெய்ன் மீது முன்னாள் வீரர் காட்டம் !! 3

அஸ்வின், ஹனுமா விஹாரியின் விக்கெட்டை எடுக்க ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் எடுத்த அனைத்து முயற்சியும் வீணானததால், கடுப்பான ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்களை நோக்கி வார்த்தை சீண்டல்களிலும் ஈடுபட்டனர். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான டிம் பெய்ன் அஸ்வினை சீண்டும் வகையில் பேசி கொண்டே இருந்தார்.

அஸ்வினை விளையாட விடாமால் தொந்தரவு செய்து கொண்டே இருந்த டிம் பெய்னுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் டிம் பெய்னின் அநாகரீக செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நீ பேசுறதுக்கு எந்த தகுதியும் கிடையாது; டிம் பெய்ன் மீது முன்னாள் வீரர் காட்டம் !! 4

அந்தவகையில், டிம் பெய்னின் செயலை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ள முன்னாள் வீரர் பிராட் ஹாக், நீங்கள் பேச வேண்டும் என்றால் அதற்கு முதலில் ஒழுங்காக கேட்ச்களையும் பிடிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய வீரர்களை சீண்டுவதை மட்டுமே வேலையாக வைத்திருந்த டிம் பெய்ன், இந்திய வீரர்கள் கொடுத்த மூன்று முக்கிய கேட்ச்களையும் கோட்டைவிட்டதை குறிப்பிட்டே பிராட் ஹாக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *