விராட் கோலியால் மட்டுமே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியும்; ரிக்கி பாண்டிங் நம்பிக்கை !! 1

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உச்சத்தில் இருந்த விராத் கோலி கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பல்வேறு விமர்சனத்திற்கு ஆளாகி வந்தார். ஏனெனில் சதம் அடிப்பதற்கு பெயர்போன அவர், தனது 70 வது சதத்தை பூர்த்தி செய்த பிறகு 71 வது சதம் அடிப்பதற்கு ஆயிரம் நாட்களுக்கு மேலாக எடுத்துக் கொண்டார். ஆனாலும் இந்திய அணிலிருந்து அவர் நீக்கப்படவில்லை. ஏனெனில் தொடர்ச்சியாக அரைசதங்களை அடித்து வந்தார். இருப்பினும் விராட் கோலியிடம் சதம் மட்டுமே எதிர்பார்ப்பதால், இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

விராட் கோலியால் மட்டுமே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியும்; ரிக்கி பாண்டிங் நம்பிக்கை !! 2

எப்படியாவது சதம் அடித்து விமர்சிப்பவர்களின் வாயை அடைக்க வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய நெருக்கடி குறைய வேண்டும் என்பதற்காகவும் மூன்று வித போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொண்டார்.ஆனால் அப்படி இருந்தும் இவரால் பேட்டிங்கில் முன்பு போல் செயல்பட முடியவில்லை, இதனால் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது என்று பல்வேறு விமர்சனங்கள் மீண்டும் எழத்துவங்கின. அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினார். 5 போட்டிகளில் விளையாடி 276 ரன்கள் அடித்தார். அதில் இரண்டு அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக செயல்பட்டு விராட் கோலி சதம் விளாசிய பிறகு, அவரது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டனர். ஏனெனில் அடுத்த சில வாரங்களிலேயே டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னர் விராட் கோலி பார்மிற்கு வந்திருப்பது பெருத்த நம்பிக்கையை கொடுக்கிறது.

 

இந்நிலையில் சதத்தில் சதம் அடித்து அசத்திய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி நிச்சயம் முறியடிப்பார் என்ற பேச்சும் மீண்டும் எலத் தொடங்கியுள்ளது.

விராட் கோலியால் மட்டுமே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியும்; ரிக்கி பாண்டிங் நம்பிக்கை !! 3

அந்த வகையில், சச்சின் டெண்டுல்கர் விளையாடிய காலகட்டத்தில் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்., விராட் கோலி நிச்சயம் சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிப்பார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரிக்கி பாண்டிங் தெரிவித்ததாவது,“மூன்று வருடத்திற்கு முன்பு விராட் கோலி சதத்தில் சதம் அடிப்பாரா என்று கேட்டிருந்தால் நான் அடிப்பார் என்று அடித்து சொல்லி இருப்பேன். ஆனால் தற்பொழுது அவர் முன்பை விட மிக மெதுவாக விளையாடுகிறார். ஆனால் தற்பொழுதும் அதற்கான வாய்ப்புகளும் உள்ளது, அதில் எந்த சந்தேகமும் பட தேவை இல்லை. சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனையை செய்வதற்கு விராட் கோலிக்கு இன்னும் வருடங்கள் உள்ளது,இன்னும் 30 சதங்கள் தான் பின்தங்கியுள்ளார்.வருடத்தில் ஐந்து அல்லது ஆறு டெஸ்ட் சதங்கள் அடித்து விடலாம், இதை தொடர்ந்து செய்தால் அடுத்து 3 அல்லது 4 வருடத்தில் சதங்களின் எண்ணிக்கை கூடிவிடும், டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களின் ஓரிரு சதங்கள் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை எளிதாக சமன் செய்துவிடலாம், விராட் கோலி இதை செய்யவே முடியாது என்று நான் கூறவில்லை,விராட் கோலிக்கு சிறு வாய்ப்பு கிடைத்தாலும் நிச்சயம் அவருக்கு இருக்கும் வேகம் அவரை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் செல்லும்” என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.

விராட் கோலியால் மட்டுமே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியும்; ரிக்கி பாண்டிங் நம்பிக்கை !! 4

ஏற்கனவே விராட் கோலி 71 சதங்கள் அடித்து ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.