தமிழ் மொழி கற்கும்  சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய சிங்கம் இம்ரான் தாஹிர்… கொண்டாடும் ரசிகர்கள் !! 1

தமிழ் மொழி கற்கும்  சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய சிங்கம் இம்ரான் தாஹிர்… கொண்டாடும் ரசிகர்கள்

ஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், தமிழ் மொழியை கற்றுக்கொள்ள பயிற்றுனர் ஒருவரை நியமித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

தமிழ் மொழி கற்கும்  சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய சிங்கம் இம்ரான் தாஹிர்… கொண்டாடும் ரசிகர்கள் !! 2

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

இதில் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்ட நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்   நடைபெற்றது.

தமிழ் மொழி கற்கும்  சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய சிங்கம் இம்ரான் தாஹிர்… கொண்டாடும் ரசிகர்கள் !! 3

இதில் தென் ஆப்ரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அணியில் எடுத்து கொடுத்து கொண்டது.

இந்நிலையில் விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற சீருடையை அணிய உள்ள இம்ரான் தாஹிர், அந்த சீருடையை போடுவதற்கு முன்பு தமிழ் மொழியையும் கற்றுகொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டார் போல, தமிழை தனக்கு கற்றுக்கொடுக்க பயிற்றுநர் ஒருவரை நியமித்துள்ளார்.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய உள்ளது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள தாஹிர், இது குறித்து பதிவிட்டுள்ள ட்வீட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, சென்னை மக்கள் முன்னிலையில் விளையாட உள்ளதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை சென்னை அணியில் எடுத்து கொண்ட சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனுக்கு நன்றி,” என்று பதிவிட்டுள்ளார். மேலும் பிரபல சினிமா டயலாக்கான  “எடுடா வண்டிய, போடுற விசலா” என்று தமிழிலும் பதிவிட்டுள்ளார்.

அதே போல் மற்றொரு ட்வீட்டில் தனக்கு தமிழ் மொழி கற்றுக்கொடுக்க உள்ள பயிற்றுநர், இவர் தான் என்றும் அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் தாஹிர் வெளியிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டை தொடர்ந்து இம்ரான் தாஹிர், தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *