4வது டெஸ்டில் பொட்டி பாம்பு போல் அடங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ! இதற்கெல்லாம் காரணம் அஸ்வின் தான் ! 1

4வது டெஸ்டில் பொட்டி பாம்பு போல் அடங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ! இதற்கெல்லாம் காரணம் அஸ்வின் தான் !

இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணியும் டி20 தொடரை இந்திய அணியும் 2-1 என கைப்பற்றியது. 

தற்போது இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதியிலிருந்து பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த நான்கவது போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் யாரும் இந்திய வீரர்களை வம்பிழுக்க வில்லை. தொடர்ச்சியாக ஸ்லெட்ஜிங் செய்து வரும் வேட், லபுசாக்னே மற்றும் டிம் பெய்ன் ஆகியோர் இந்த போட்டியில் அமைதி காத்து வருகின்றனர்.

4வது டெஸ்டில் பொட்டி பாம்பு போல் அடங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ! இதற்கெல்லாம் காரணம் அஸ்வின் தான் ! 2

கடந்த சிட்னி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அஸ்வின் மற்றும் விஹாரி ஆகியோரின் உதவியால் போட்டியை ட்ரா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3வது போட்டியில் இந்திய பேட்ஸ்மன் சுப்மன் கில்லை பேட்டிங் செய்ய விடாமல் லபுசாக்னே ஸ்லெட்ஜிங் செய்தார். இதைத்தொடர்ந்து இறுதி நாள் போட்டியன்று இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் விஹாரி பேட்டிங் செய்துக் கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் அவர்களின் கவனத்தை சிதைக்கும் வகையில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

4வது டெஸ்டில் பொட்டி பாம்பு போல் அடங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ! இதற்கெல்லாம் காரணம் அஸ்வின் தான் ! 3

இதனால் ஒருகட்டத்தில் கோபமடைந்த அஸ்வின் டிம் பெய்னுக்கு தக்க பதிலடி கொடுத்தார். இதன்பின் டிம் பெய்ன் வாயடைத்து போனார். இவ்வாறு ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். ஆனால் இந்த முறை இந்திய வீரர்களும் பதிலுக்கு ஸ்லெட்ஜிங் செய்து தக்க பதிலடி கொடுத்து வந்தனர். ஆஸ்திரேலிய வீரர்கள் லபுசாக்னே மற்றும் டிம் பெய்னின் இந்த செயல் பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் யாரும் இந்திய வீரர்களை சீண்டவில்லை பொட்டி பாம்பு போல் அடங்கி தங்களது போட்டியில் கவனம் செலுத்தி வருகின்றனர். 

4வது டெஸ்டில் பொட்டி பாம்பு போல் அடங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ! இதற்கெல்லாம் காரணம் அஸ்வின் தான் ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *