கோலி தன் அணிக்கு செய்ததை கூட, கோப்பைகளை வென்ற ரோகித், தோனி செய்யவில்லை ! 1

தனது ஐபிஎல் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்தியாவில் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா-இங்கிலாந்து தொடரில் பங்குபெற்ற ஐபிஎல் வீரர்கள் அனைவரும் தற்போது தங்களது ஐபிஎல் அணிகள் உடன் இணைந்து இருக்கின்றனர். இந்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் 2 நாட்களே இருப்பதால் அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கோலி தன் அணிக்கு செய்ததை கூட, கோப்பைகளை வென்ற ரோகித், தோனி செய்யவில்லை ! 2

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் எந்த ஒரு அணியும் தங்களது சொந்த மைதானங்களில் விளையாட முடியாது என்று அதிரடி முடிவை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. இதனால் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்த இரு அணிகளுக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானம் சொந்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும் கோப்பைகளை வென்று இருக்கிறது.

கோலி தன் அணிக்கு செய்ததை கூட, கோப்பைகளை வென்ற ரோகித், தோனி செய்யவில்லை ! 3

இந்நிலையில், தனது ஐபிஎல் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியல் வெளியிட்டு இருக்கின்றனர். இதில் ராய்ல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி 5878 ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருக்கிறார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரெஷ் ரெய்னா 4527 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இதையடுத்து மூன்றாவது இடத்தில் பெங்களூர் வீரர் ஏபி டி வில்லியரஸ் 4178 ரன்களுடன் இருக்கிறார். இதையடுத்து ரோகித் சர்மா 4060 ரன்களும், தோனி 4058 ரன்களும், டேவிட் வார்னர் 3819 ரன்களும், கிறிஸ் கெயில் 3163 ரன்களும் குவித்து அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர்.

கோலி தன் அணிக்கு செய்ததை கூட, கோப்பைகளை வென்ற ரோகித், தோனி செய்யவில்லை ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *