அடப்போங்கடா… ரத்தாகும் அடுத்த தொடர்; செம கடுப்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் !! 1

இந்தியா இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகள் இடையேயான இந்த தொடர் ஜூலை 13ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் வைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடப்போங்கடா… ரத்தாகும் அடுத்த தொடர்; செம கடுப்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் !! 2

இலங்கை அணியுடனான தொடர் நடைபெறும் அதே சமயத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளதால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திற்கும், இளம் இந்திய படையை இலங்கைக்கும் அனுப்ப பிசிசிஐ., திட்டமிட்டுள்ளது.

இந்த அணியில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, பிரித்வி ஷா, புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், சூர்யகுமார் யாதவ், தேவ்தத் படிக்கல், வருண் சக்ரவர்த்தி, சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திவேதியா உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடப்போங்கடா… ரத்தாகும் அடுத்த தொடர்; செம கடுப்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் !! 3

இந்நிலையில் தற்போது புது சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. இந்தியா – இலங்கை தொடர் நடைபெறும் அந்த காலகட்டத்தில் இலங்கையில் கொரோனா தாக்கம் தீவிரமடையும் என மருத்துவக் குழுவினர் எச்சரித்துள்ளனர். இதனால், இலங்கை சுற்றுப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் அர்ஜுனா டி சில்வா, “போட்டிகள் அனைத்தையும் கொழும்புவில் உள்ள மைதானத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அந்த கால கட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கக் குழு அமைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

அடப்போங்கடா… ரத்தாகும் அடுத்த தொடர்; செம கடுப்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் !! 4

மேலும் பேசிய அவர், “நிலைமை அப்போது எப்படி இருக்கிறதோ, அதைப் பொறுத்துத்தான் முடிவுகள் எடுக்க முடியும். தற்போது உத்தரவாதம் எதுவும் கொடுக்க முடியாது. போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” எனத் தெரிவித்தார்.

போட்டிகளை உறுதியாக நடத்துவோம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவிக்காததால் பிசிசிஐ அதிர்ச்சியடைந்துள்ளது. ஏற்கனவே, ஐபிஎல் 14ஆவது சீசன் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இலங்கை தொடரும் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதால் கங்குலி அப்செட்டில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *