நியூசிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் வந்தது.

அணியின் எண்ணிக்கை 80 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். செய்பெர்ட் 25 பந்தில் 43 ரன் எடுத்து அவுட்டானார்.

அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 30 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. மிச்செல் 19 ரன்னுடனும், டெய்லர் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதனால் இந்தியாவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே சோகமாக அமைந்தது. துவக்க வீரர் தவான் 5 ரன்கள் எடுத்து முதல் ஓவரிலேயே நடையை கட்டினார். பின்னர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கர் நியூசிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்தார். அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார் விஜய் சங்கர். பின்னர் வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் சிக்ஸர் பவுண்டரிகளுமாக விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். 12 பந்தில் 28 ரன் விளாசிய நிலையில் பண்ட் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 38, பாண்டியா 21, தோனி 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது.

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்-க்ருனால் பாண்டியா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடைசிவரை போராடினர். இருப்பினும் இந்தியாவால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

டிம் சீஃபெர்ட்- 9/10

இவர் மூன்று போட்டிகளில் ஆடி 139  ரன்கள் குவித்துள்ளார்

கொலின் முர்ரோ- 6/10

இவர் மூன்று போட்டிகளில் ஆடி 118 ரன்கள் குவித்துள்ளார்

கேன் வில்லியம்சன்- 5/10

இவர் மூன்று போட்டிகளில் ஆடி 81 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்

கொலின் டி கிராண்ட்ஹோம்ம்- 7/10

இவர் மூன்று போட்டிகளில் ஆடி 83 ரன்கள் குவித்துள்ளார்

டாரல் மிட்செல்- 7/10

இவர் மூன்று போட்டிகளில் ஆடி 28 ரன்களும் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்

ரோஸ் டெய்லர் – 4/10

இவர் மூன்று போட்டிகளில் ஆடி 79 ரன்கள் குவித்துள்ளார்

மிட்செல் சாண்ட்னர்- 6/10

இவர் இரண்டு போட்டிகளில் விளையாடி 14 ரன்களும் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

ஸ்காட் குகேஜிலிஜன்- 3/10

இவர் மூன்று போட்டிகளில் ஆடி 22 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் எடுத்துள்ளார்

டிம் சவுதி – 5/10

இவர் மூன்று போட்டிகளில் ஆடி 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்

ஈஷ் சோதி – 4/10

இவர் 3 போட்டிகளில் ஆடி 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்

பிளேயர் டிக்கர்- 6/10

இவர் ஒரு போட்டியில் மட்டுமே ஆடி ஒரு விக்கெட் மற்றும் 33 ரன்கள் எடுத்துள்ளார்

டக் ப்ரெஸ்வெல்  5/10

இவர் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை

 



  • SHARE

    விவரம் காண

    இந்திய அணியின் துவக்க வீரருக்கு காயம்; கவலையில் ரசிகர்கள் !!

    இந்திய அணியின் துவக்க வீரருக்கு காயம்; கவலையில் ரசிகர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வலை பயிற்சியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர்...

    ஒரே ஒவரில் 5 பவுண்டரி! பாக். வீரரை அடித்து துவம்சம் செய்த ஆப்கன் இளம் வீரர்!

    Afghanistan's Hazratullah Zazai (L) waves away bowler Pakistan's Shaheen Shah Afridi after hitting another shot for four runs during the 2019 Cricket World Cup warm up match between Pakistan and Afghanistan at Bristol County Ground in Bristol, southwest England, on May 24, 2019. (Photo by Glyn KIRK / AFP) (Photo credit should read GLYN KIRK/AFP/Getty Images)
    ஆப்கான் அணியில் இந்த உலகக்கோப்பையில் பவுலர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒரு தொடக்க வீரர் இருக்கிறார், அவர்தான் ஹஸ்ரதுல்லா சஸாய். இவர் முன்பு ஒருமுறை...

    கவலைப்படாதீங்க கோஹ்லி மாஸ் பண்ணிடலாம்; நம்பிக்கை கொடுக்கும் ரோஹித் சர்மா !!

    கவலைப்படாதீங்க கோஹ்லி மாஸ் பண்ணிடலாம்; நம்பிக்கை கொடுக்கும் ரோஹித் சர்மா உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நம்பிக்கை வார்த்தைகளை...

    பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் காயம்: ரசிகர்கள் கவலை!

    உலகக்கோப்பைத் தொடருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு காயம்...

    ‘எப்பிடி இருந்த நான்.. இப்பிடி ஆய்ட்டேன்’ ஹர்திக் பாண்டியா வெளியிட்ட ‘அன்றும்,இன்றும்’ புகைப்படம்!

    தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ஹர்திக் பாண்ட்யா தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மே 30ஆம்...