பாரபட்சமே இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்; தரமான வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா !! 1

இந்திய அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

பாரபட்சமே இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்; தரமான வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா !! 2

இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 71* ரன்களும், கே.எல் ராகுல் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களும் எடுத்தனர்.

பாரபட்சமே இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்; தரமான வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா !! 3

ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகளையும், ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பாரபட்சமே இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்; தரமான வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா !! 4

இதன்பின் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்து மளமளவென ரன் குவித்தது. அந்த அணியின் கேப்டனும் துவக்க வீரருமான ஆரோன் பின்ச் 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார், முதல்முறையாக துவக்க வீரராக களமிறங்கிய கேமிரான் க்ரீன் நாளாபுறமும் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்து 30 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

பாரபட்சமே இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்; தரமான வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா !! 5

மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் 1 ரன்னிலும், இங்லீஸ் 17 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதன்பின் கூட்டணி சேர்ந்த மேத்யூ வேட் – டிம் டேவிட் ஜோடி இந்திய அணியின் வெற்றி நம்பிக்கையை உடைத்தெறியும் வகையில் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டிம் டேவிட் 18 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ வேட் 21 பந்துகளில் 45* ரன்களும் எடுத்ததன் மூலம் 19.2 ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாரபட்சமே இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்; தரமான வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா !! 6

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். புவனேஷ்வார் குமார், ஹர்சல் பட்டேல் போன்ற முக்கிய வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர்.

Leave a comment

Your email address will not be published.