பந்துவீச்சில் மிரட்டிய முகேஷ் குமார்... அர்ஸ்தீப் சிங் அபாரம்; 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா !! 1
பந்துவீச்சில் மிரட்டிய முகேஷ் குமார்… அர்ஸ்தீப் சிங் அபாரம்; 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டி.20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி 3 போட்டியிலும், ஆஸ்திரேலிய அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி.20 போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பந்துவீச்சில் மிரட்டிய முகேஷ் குமார்... அர்ஸ்தீப் சிங் அபாரம்; 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 53 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 31 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பென் டெக்மர்ட் 58 ரன்களும், டர்வீஸ் ஹெட் 28 ரன்களும், மேத்யூ வேட் 22 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்கவில்லை.

பந்துவீச்சில் மிரட்டிய முகேஷ் குமார்... அர்ஸ்தீப் சிங் அபாரம்; 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா !! 3

முகேஷ் குமார் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சை கடைசி நேரத்தில் எதிர்கொள்ள முடியாமல் திணறிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள்  மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது.

பந்துவீச்சில் மிரட்டிய முகேஷ் குமார்... அர்ஸ்தீப் சிங் அபாரம்; 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா !! 4

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், அர்ஸ்தீப் சிங் மற்றும் ரவி பிஸ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *