மேத்யூ வேட் அசால்டாக இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்ததற்கு இது தான் காரணம்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 1

ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்ட பின்பும் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேத்யூ வேடால் எப்படி இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட முடிந்தது என்ற காரணத்தை ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பைக்கு முன்பாக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. முதல் டி20 போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 208 ரன்கள் அடித்தது.

மேத்யூ வேட் அசால்டாக இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்ததற்கு இது தான் காரணம்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 2

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்ச் 22 ரன்களில் ஆட்டம் இழந்தார். முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கிய கிரீன், அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு 30 பந்துகளில் 61 ரன்கள் விலாச, ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் சட்டென்று மேலே சென்றது. ஸ்மித் 35 ரன்கள் அடித்து வழக்கம் போல தனது பங்களிப்பை கொடுத்து வெளியேறினார். இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ரன்களை கட்டுப்படுத்தி வந்த இந்தியாவிற்கு, கீழ் வரிசையில் களமிறங்கிய மேத்தியு வேட் அச்சுறுத்தலாக திகழ்ந்தார். இவர் 21 பந்துகளில் 45 ரன்கள் விலாசி ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெறச் செய்தார். 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை கைப்பற்றி 1-0 என முன்னிலையில் உள்ளது.

 

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த மேத்யூ வேட் எப்படி சிறப்பாக செயல்பட்டார் என்பது குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் முன்னாள் இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேத்யூ வேட் அசால்டாக இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்ததற்கு இது தான் காரணம்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 3

அதில், 2022 ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ வேட் , வழக்கத்திற்கு மாறாக துவக்க வீரர் மற்றும் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யாமல் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடும்போது 5 மற்றும் 6வது இடத்தில் பேட்டிங் செய்கிறார். இந்தியா அணிக்கு எதிரான ஆட்டம் இவர் உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் வீரர் சஹீன் அப்ரிடிக்கு எதிராக இரண்டு சிக்ஸர்கள் அடித்ததை ஞாபகப்படுத்துகிறது. இந்திய அணிக்கு எதிராக லேப் ஷாட் மற்றும் மிட்விக்கெட் திசையை நோக்கி பேட்டிங் செய்துள்ளார். குறிப்பாக ஹர்ஷல் பட்டேல் வீசிய ஸ்லோயர் பாலை ஸ்கொயர் லெக் பகுதியில் சிக்சர் அடித்தது அவருடைய அனுபவத்தை காட்டுகிறது என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

மேத்யூ வேட் அசால்டாக இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்ததற்கு இது தான் காரணம்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 4

மேத்யூ வேட் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்த ஐபிஎல் தொடரை சரியாக பயன்படுத்தி இந்திய மைதானத்தை புரிந்து கொண்டுள்ளதாக பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.