சரியான ஒரு காரணம் சொல்லுங்க பாப்போம்... ஒரு வேலையும் இல்லாமல் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கொடுப்பது ஏன்..? முன்னாள் ஜாம்பவான் கேள்வி !! 1

தினேஷ் கார்த்திக்கிற்கு காரணமே இல்லாமல் ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்படுவது ஏன் என முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவனான மேத்யூ ஹைடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

சரியான ஒரு காரணம் சொல்லுங்க பாப்போம்... ஒரு வேலையும் இல்லாமல் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கொடுப்பது ஏன்..? முன்னாள் ஜாம்பவான் கேள்வி !! 2

இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 208 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 208 ரன்கள் குவித்தாலும், பந்துவீச்சில் மிக மிக மோசமாக செயல்பட்டதால் இந்திய அணி இந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது.

சரியான ஒரு காரணம் சொல்லுங்க பாப்போம்... ஒரு வேலையும் இல்லாமல் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கொடுப்பது ஏன்..? முன்னாள் ஜாம்பவான் கேள்வி !! 3

முதல் டி.20 போட்டியில் மிரட்டல் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி 23ம் தேதி நடைபெற உள்ளது. இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக முக்கியமானது என்பதால் இந்த போட்டி மீது மிக அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி.20 போட்டி குறித்தும், இரு அணிகள் இடையேயான நடப்பு டி.20 தொடர் குறித்தும் பல்வேறு விசயங்களை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நடப்பு டி.20 தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான மேத்யூ ஹைடன், தினேஷ் கார்த்திக்கிற்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

சரியான ஒரு காரணம் சொல்லுங்க பாப்போம்... ஒரு வேலையும் இல்லாமல் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கொடுப்பது ஏன்..? முன்னாள் ஜாம்பவான் கேள்வி !! 4

இது குறித்து மேத்யூ ஹைடன் பேசுகையில், “தினேஷ் கார்த்திக்கின் ரோல் என்ன என்பதை நான் யோசிக்கிறேன். தினேஷ் கார்த்திக்கை பற்றி நான் மதிப்பில்லாமல் பேசவில்லை. ஆனால் அவர் இன்னும் அதிகமாக பேட்டிங் ஆடவேண்டும். அவர் சிறந்த பிளேயர். அவர் டெத் ஓவர்களில் ஆடும் அருமையான ஷாட்டுகளை முன்கூட்டியே இறங்கியும் ஆடமுடியும். எனவே அவரை இன்னும் மேலே இறக்கிவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.