அடுத்த போட்டியிலாவது இந்த பையனுக்கு வாய்ப்பு கொத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு ஆப்பு உறுதி… இந்திய அணிக்கு புது ஐடியா கொடுக்கும் தினேஷ் கார்த்திக்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் வாசிங்டன் சுந்தருக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை மிக மோசமாக இழந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக இந்திய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து, தோல்வியுடன் ஒருநாள் தொடரையும் துவங்கிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில், பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் மிக சிறப்பாக செயல்பட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22ம் தேதி நடைபெற உள்ளது.
கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கே ஒருநாள் தொடரின் சாம்பியன் பட்டம் கிடைக்கும் என்பதால், இரு அணிகள் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், நடப்பு ஒருநாள் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான தினேஷ் கார்த்திக், அடுத்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் வாசிங்டன் சுந்தருக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், “அடுத்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் வாசிங்டன் சுந்தர் சேர்க்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிரடி துவக்கம் கொடுத்து வரும் டெர்வீஸ் ஹெட்டின் விக்கெட்டை வாசிங்டன் சுந்தரால் இலகுவாக கைப்பற்ற முடியும். பவர்ப்ளே ஓவர்களில் வாசிங்டன் சுந்தரை பயன்படுத்தி கொள்ளலாம். மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெற இருக்கும் சென்னை ஆடுகளம் வாசிங்டன் சுந்தருக்கு அதிக பரீட்சயமானது என்பதால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுப்பதே சரியானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.