நாளை முதல் ஒருநாள் போட்டி; வெல்லப்போவது யார்..?

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையிலும், அடுத்ததாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

முதல் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. ஆஸ்திரேலிய அணியும் வீரர்களை அறிவித்துவிட்டது. ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணி வலுவிழந்த அணியாக இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் ஃபின்ச் நல்ல ஃபார்மில் ஆடிவருகிறார். மேலும் சில புதிய வீரர்களை ஆஸ்திரேலிய அணி சேர்த்துள்ளது.

அதேநேரத்தில் இந்திய அணி அனுபவம் வாய்ந்த வீரர்களை உள்ளடக்கிய அணியாக உள்ளது.  ஆனால் ஆஸ்திரேலிய அணியோ அதிகப்படியான இளம் வீரர்களை உள்ளடக்கிய அணியாக உள்ளது.

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மிகப்பெறும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில், உஸ்மான் கவாஜா, சேன் மார்ஸ், அலெக்ஸ் கேரி, ஹேண்ட்ஸ்கோம்ப் போன்ற நட்சத்திர வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் மேக்ஸ்வெல்லும், மார்க்ஸ் ஸ்டோய்னிஸும் இடம்பெற்றுள்ளனர். அதே போல் சுழற்பந்து வீச்சாளர்களில் வழக்கமாக இடம்பெறும் ஆடம் ஜாம்பாவிற்கு பதிலாக இம்முறை நாதன் லயோன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை படுமோசமாக இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரில் பழி தீர்க்க காத்திருக்கும் என்பதால் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

முதல் ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;

ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), சேன் மார்ஸ், ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளன் மேக்ஸ்வெல், நாதன் லயோன், பீட்டர் சிடில், ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹண்ட்ரூஃப்.



  • SHARE

    விவரம் காண

    விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா !!

    விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 27 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் விராட்...

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

    தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

    தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...

    பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல !!

    பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல மெல்போர்னில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய...

    தோனியை பாராட்டிய பிராக் லெஸ்னரின் மேனேஜர்!!

    Eat..Sleep.. Conquer..Repeat என்னும் பிராக் லெஸ்னரின் கோட்பாடுகளை போலவே தோனி Eat..Sleep.. Finsih Game..Repeat  செய்கிறார் என அவரின் மேனேஜர் ஐசிசி கிரிக்கெட்...