பந்துவீச்சில் சொதப்புனது கூட பரவாயில்ல... ஆனா இந்த விசயம் ரொம்ப மோசம்; ரவி சாஸ்திரி ஓபன் டாக் !! 1

இந்திய அணி பீல்டிங்கில் மிக மிக மோசமாக செயல்பட்டு வருவதாக இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 71* ரன்களும், கே.எல் ராகுல் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் சொதப்புனது கூட பரவாயில்ல... ஆனா இந்த விசயம் ரொம்ப மோசம்; ரவி சாஸ்திரி ஓபன் டாக் !! 2

ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகளையும், ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமிரான் க்ரீன் 30 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து கொடுத்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

பந்துவீச்சில் சொதப்புனது கூட பரவாயில்ல... ஆனா இந்த விசயம் ரொம்ப மோசம்; ரவி சாஸ்திரி ஓபன் டாக் !! 3

இதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் (1), இங்லீஸ் (17) ஆகியோர் பெரிதாக ரன் குவிக்காவிட்டாலும், அடுத்ததாக கூட்டணி சேர்ந்த டிம் டேவிட் – மேத்யூ வேட் ஜோடி இந்திய அணியின் அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்தது. டிம் டேவிட் 18 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத மேத்யூ வேட் 21 பந்துகளில் 45* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 19.2 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் சொதப்புனது கூட பரவாயில்ல... ஆனா இந்த விசயம் ரொம்ப மோசம்; ரவி சாஸ்திரி ஓபன் டாக் !! 4

 

சொந்த மண்ணில், அதுவும் 208 ரன்கள் குவித்தும் இந்திய அணி தோல்வியடைந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

பந்துவீச்சில் சொதப்புனது கூட பரவாயில்ல... ஆனா இந்த விசயம் ரொம்ப மோசம்; ரவி சாஸ்திரி ஓபன் டாக் !! 5

அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி.20 போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணி பீல்டிங் மிக மோசமாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சில் சொதப்புனது கூட பரவாயில்ல... ஆனா இந்த விசயம் ரொம்ப மோசம்; ரவி சாஸ்திரி ஓபன் டாக் !! 6

இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், “தற்போதைய இந்திய அணி பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 6 வருட இந்திய அணியை எடுத்து பார்த்தால் பீல்டிங்கில் குறையே சொல்ல முடியாத அணியாகவே இருந்தது, ஆனால் தற்போதைய இந்திய அணி அப்படியல்ல. யாருமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பீல்டிங்கில் செயல்படுவது இல்லை. ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி.20 போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங்கும் முக்கிய காரணம், பீல்டிங்கில் இந்திய வீரர்கள் மோசமாக செயல்படுவது வேதனையளிக்கிறது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.