என்ன செய்றதுனு எனக்கே தெரியல... தோல்விக்கு இவர்கள் தான் முழு காரணம்; ரோஹித் சர்மா வேதனை !! 1

பந்துவீச்சில் சொதப்பியதே ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி.20 போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

என்ன செய்றதுனு எனக்கே தெரியல... தோல்விக்கு இவர்கள் தான் முழு காரணம்; ரோஹித் சர்மா வேதனை !! 2

இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 71* ரன்களும், கே.எல் ராகுல் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களும் எடுத்தனர்.

என்ன செய்றதுனு எனக்கே தெரியல... தோல்விக்கு இவர்கள் தான் முழு காரணம்; ரோஹித் சர்மா வேதனை !! 3

ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகளையும், ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமிரான் க்ரீன் 30 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து கொடுத்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

என்ன செய்றதுனு எனக்கே தெரியல... தோல்விக்கு இவர்கள் தான் முழு காரணம்; ரோஹித் சர்மா வேதனை !! 4

இதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் (1), இங்லீஸ் (17) ஆகியோர் பெரிதாக ரன் குவிக்காவிட்டாலும், அடுத்ததாக கூட்டணி சேர்ந்த டிம் டேவிட் – மேத்யூ வேட் ஜோடி இந்திய அணியின் அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்தது. டிம் டேவிட் 18 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத மேத்யூ வேட் 21 பந்துகளில் 45* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 19.2 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, பந்துவீச்சில் சொதப்பியதே தோல்விக்கான காரணம் என வேதனை தெரிவித்துள்ளார்.

என்ன செய்றதுனு எனக்கே தெரியல... தோல்விக்கு இவர்கள் தான் முழு காரணம்; ரோஹித் சர்மா வேதனை !! 5

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. 200 ரன்களே வெற்றிக்கு போதுமானது தான். பீல்டிங்கிலும் நாங்கள் சொதப்பிவிட்டோம். பேட்ஸ்மேன்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர், ஆனால் பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை சரியாக செய்ய தவறிவிட்டனர். 200+ ரன்கள் குவித்தும் தோல்வியடைந்தது சாதரண விசயம் அல்ல, ஏற்புடையதும் அல்ல. தவறுகள் என்ன என்பதை கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டனர், அவர்கள் அடித்த சில ஷாட்கள் மிக சிறப்பாக இருந்தது. ஓரிரு விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றியும் பயனில்லாமல் போய்விட்டது, கூடுதலாக ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரியாக கூட இருந்திருக்கலாம். தவறுகளை திருத்தி கொண்டு அடுத்த போட்டியை எதிர்கொள்வோம், குறிப்பாக பந்துவீச்சில் இருக்கும் பிரச்சனைகளை அடுத்த போட்டிக்கு முன் சரி செய்வோம்” என்று தெரிவித்தார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி.20 போட்டி 23ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.