ரிஷப் பண்டை ரொம்பவே மிஸ் பண்றேன்; உருக்கமாக பேசிய ரிக்கி பாண்டிங் !! 1

ரிஷப் பண்டை ரொம்பவே மிஸ் பண்றேன்; உருக்கமாக பேசிய ரிக்கி பாண்டிங்..

ரிஷப் பண்ட் போன்ற ஒரு வீரர் கிடைப்பதே கடினம் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் டெல்லி அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 30ஆம் தேதி கார் விபத்துக்குள்ளாகிய இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட், உயிர் சேதத்திலிருந்து தப்பித்தாலும் உடல் முழுவதும் கடுமையான காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

ரிஷப் பண்டை ரொம்பவே மிஸ் பண்றேன்; உருக்கமாக பேசிய ரிக்கி பாண்டிங் !! 2

ஆழமான வெட்டுக்காயங்கள், சிராய்ப்புகள் என அனைத்தும் சில வாரங்களில் குணமடைந்தாலும் அவருக்கு முட்டியில் கிழிந்திருக்கும் ஜவ்வு பிரச்சனை சரியாவதற்கு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால், பார்டர் கவாஸ்கர் டிராபி, 2023 ஐபிஎல் தொடர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்,மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் என எதிலும் பங்கு பெற மாட்டார் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ரிஷப் பண்டை பற்றி கவலைப்பட தேவையில்லை என்றும் அவர் விளையாடுவதற்கு ஆறு மாதங்கள் தான் ஆகும் என்றும் எனவே ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ரிஷப் பண்டை அணியில் எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.இதனால் இந்திய கிரிக்கெட் வட்டத்தில், ரிஷப் பண்ட் உலக கோப்பை தொடருக்கு தயாராகி விடுவார் என்பதால் அவரை வைத்தே அணியும் கட்டமைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்தது.

ரிஷப் பண்டை ரொம்பவே மிஸ் பண்றேன்; உருக்கமாக பேசிய ரிக்கி பாண்டிங் !! 3

இந்த நிலையில், ரிஷப் பண்டின் மருத்துவ குழு கண்காணிப்பாளர்களில் ஒருவர் ரிஷப் பண்ட் முழுமையாக குணமாக 1½ வருடங்கள் ஆகும் என தெரிவித்திருந்தார்.இதனால் ரிஷப் பண்டிர்க்கு தங்களுடைய ஆதரவான கருத்துக்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிர்க்கியட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் டெல்லி கேப்பிடல் பணியில் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், ரிஷப் பண்ட் சீக்கிரம் குணமடைந்து விளையாட பிரார்த்திப்போம் என செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக தெரிவுத்துள்ளார்.

ரிஷப் பண்டை ரொம்பவே மிஸ் பண்றேன்; உருக்கமாக பேசிய ரிக்கி பாண்டிங் !! 4

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் தெரிவித்ததாவது,“எனக்கு ரிஷப் பண்டை மிகவும் பிடிக்கும்,அவருக்கு நடத்த அந்த கொடூர சம்பவம் மிகவும் மோசமானது.இது அவருக்கு மட்டுமில்லாமல் அவரை விரும்பும் பலருக்கும் வருத்தமாக இருக்கிறது, ரிஷப் பண்டை தெரிந்த அனைவருமே அவரை நேசிப்பார்கள்,அவர் இன்னும் இந்த உலகில் சாதிக்க வேண்டியது அதிகம் உள்ளது,எனவே நாம் அனைவரும் அவர் சீக்கிரம் குணமாகி விளையாட வேண்டும் என்று கைகோர்த்து இறைவனை பிரார்த்திப்போம்.அவரை போன்ற வீரரை நம்மால் பார்ப்பது கடினம்,தற்போதைய நிலையில் அவருக்கு பதில் டெல்லி அணியில் மாற்று வீரராக ஒருவரை தேட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம், ரிஷப் பண்ட் எப்பொழுதும் அணியில் என்னோட இருக்க வேண்டும் என விரும்புவேன்,அவர் உடளவில் விளையாட தயாராகவில்லை என்றாலும் அவரை நாங்கள் அதிகம் நேசிக்கிறோம். ரிஷப் உண்மையில் மிக சிறந்த கேப்டன் அவருடைய செயல்பாடு மற்றும் சிரிப்பை மிஸ் செய்வதாக” ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *