இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க... எல்லா பிரச்சனையும் சரியாகிடும்; இந்திய அணிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுக்கும் மேத்யூ ஹைடன் !! 1

இளம் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட்டிற்கு இந்திய அணி போதிய வாய்ப்புகள் வழங்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க... எல்லா பிரச்சனையும் சரியாகிடும்; இந்திய அணிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுக்கும் மேத்யூ ஹைடன் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 71* ரன்களும், கே.எல் ராகுல் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகளையும், ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க... எல்லா பிரச்சனையும் சரியாகிடும்; இந்திய அணிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுக்கும் மேத்யூ ஹைடன் !! 3

இதன்பின் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமிரான் க்ரீன் 30 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து கொடுத்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க... எல்லா பிரச்சனையும் சரியாகிடும்; இந்திய அணிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுக்கும் மேத்யூ ஹைடன் !! 4

இதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் (1), இங்லீஸ் (17) ஆகியோர் பெரிதாக ரன் குவிக்காவிட்டாலும், அடுத்ததாக கூட்டணி சேர்ந்த டிம் டேவிட் – மேத்யூ வேட் ஜோடி இந்திய அணியின் அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்தது. டிம் டேவிட் 18 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத மேத்யூ வேட் 21 பந்துகளில் 45* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 19.2 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

சொந்த மண்ணில், அதுவும் 208 ரன்கள் குவித்தும் இந்திய அணி தோல்வியடைந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க... எல்லா பிரச்சனையும் சரியாகிடும்; இந்திய அணிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுக்கும் மேத்யூ ஹைடன் !! 5

அந்தவகையில், இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான மேத்யூ ஹைடன், ரிஷப் பண்ட்டிற்கு இந்திய அணி சரியான வாய்ப்புகள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க... எல்லா பிரச்சனையும் சரியாகிடும்; இந்திய அணிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுக்கும் மேத்யூ ஹைடன் !! 6

இது குறித்து மேத்யூ ஹைடன் பேசுகையில், “நான் தேர்வாளராக இருந்தால் எந்தமாதிரியான அணியின் ஆடும் லெவனிலும் கண்டிப்பாக ரிஷப் பண்ட்டை எடுப்பேன். அவர்தான் எதிர்காலம். அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருக்கவேண்டும். அவர் ஸ்கோர் செய்தாலும் செய்யாவிட்டாலும், ஃபார்மில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி.. அவரை கண்டிப்பாக அணியில் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.