தயவு செஞ்சு கிளம்புங்க... சீனியர் வீரர் அதிரடி நீக்கம்; அடுத்த போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 1

ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

இந்திய வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

தயவு செஞ்சு கிளம்புங்க... சீனியர் வீரர் அதிரடி நீக்கம்; அடுத்த போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 2

இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 208 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 208 ரன்கள் குவித்தாலும், பந்துவீச்சில் மிக மிக மோசமாக செயல்பட்டதால் இந்திய அணி இந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது.

தயவு செஞ்சு கிளம்புங்க... சீனியர் வீரர் அதிரடி நீக்கம்; அடுத்த போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 3

முதல் டி.20 போட்டியில் மிரட்டல் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி 23ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இரு அணிகள் இடையேயான இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தயவு செஞ்சு கிளம்புங்க... சீனியர் வீரர் அதிரடி நீக்கம்; அடுத்த போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 4

நாக்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் ஓரிரு மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பந்துவீச்சில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது. பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. கடந்த போட்டியை போன்று இந்த போட்டியிலும் விராட் கோலி, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரே இடம்பெறுவார்கள் என தெரிகிறது.

தயவு செஞ்சு கிளம்புங்க... சீனியர் வீரர் அதிரடி நீக்கம்; அடுத்த போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 5

ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியாவும், அக்‌ஷர் பட்டேலும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஒரு மாற்றம் இருக்கலாம், குறிப்பாக உமேஷ் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டு பும்ராஹ்விற்கு அணியில் இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ராஹ் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதால், பும்ராஹ் இரண்டாவது போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என்றே தெரிகிறது.

தயவு செஞ்சு கிளம்புங்க... சீனியர் வீரர் அதிரடி நீக்கம்; அடுத்த போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 6

இது தவிர சாஹல், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.

இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், ஹர்சல் பட்டேல், புவனேஷ்வர் குமார், பும்ராஹ், யுஸ்வேந்திர சாஹல்.

Leave a comment

Your email address will not be published.