சிக்ஸ் எல்லாம் அடிக்க வேண்டாம்... இத மட்டும் பண்ணிட்டா அஸ்வினே டென்ஷன் ஆகிடுவார்; ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 1
சிக்ஸ் எல்லாம் அடிக்க வேண்டாம்… இத மட்டும் பண்ணிட்டா அஸ்வினே டென்ஷன் ஆகிடுவார்; ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர்

அஸ்வினுக்கு எதிராக இதை செய்தாலே போதும்,இந்திய அணியை எளிதாக சமாளித்துவிடலாம் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் இயான் செப்பல் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை கெத்தாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

சிக்ஸ் எல்லாம் அடிக்க வேண்டாம்... இத மட்டும் பண்ணிட்டா அஸ்வினே டென்ஷன் ஆகிடுவார்; ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 2

இந்தியா வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. பிப்ரவரி 9ம் தேதி துவங்கும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடர், மார்ச் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த கிரிக்கெட் தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெறும் என எதிர்பார்கப்படும் டெஸ்ட் தொடர் மீது அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் இப்போதே இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும் கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்திவருகின்றனர்.

அதே போல் கடந்த 2004ம் ஆண்டிற்கு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் தவித்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு, அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பலர் ஆலோசனைகளை அள்ளி வீசி வருகின்றனர். குறிப்பாக அஸ்வின், ஜடேஜா போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிப்பதற்கு தேவையான டிப்ஸை பலரும் வழங்கி வருகின்றனர்.

சிக்ஸ் எல்லாம் அடிக்க வேண்டாம்... இத மட்டும் பண்ணிட்டா அஸ்வினே டென்ஷன் ஆகிடுவார்; ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 3

அந்த வகையில் ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பேசி வரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் இயான் செப்பல் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் இந்திய அணியின் நட்சத்திர சுழற்-பந்துவீச்சாளர் ரவி அஸ்வினை எப்படி சமாளிக்க வேண்டும் என டிப்ஸ் கொடுத்துள்ளார்.

அஸ்வின்

இதுகுறித்து இயான் செப்பல் தெரிவித்ததாவது, தற்போதைய ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின் குறித்து எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை அவர்களிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அஸ்வினை பற்றி எந்த அளவிற்கு யோசிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது, ஆனால் அஸ்வின் போன்ற ஒரு தலை சிறந்த எதிரணி வீரரை பற்றி சிந்திக்க வேண்டும் ஆனால் அது அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி தான் இருக்க வேண்டும், உங்களுக்கு பேசிக்(basic) குறித்து யாரும் சொல்லித் தர தேவையில்லை, அஸ்வினுக்கு எதிராக நீங்கள் பௌண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடித்து குவிக்க வேண்டும் என அவசியம் கிடையாது, அவருக்கு எதிராக சிங்கிள்ஸ் எடுத்து ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தாலே பந்துவீச்சாளர் நெருக்கடிக்கு உள்ளாகி விடுவார், அஸ்வினுக்கு எதிராக சிங்கிள்ஸ் எடுப்பதில் அதிகம் கவனம் செலுத்தினால், அஸ்வின் தன்னுடைய திட்டத்தை மாற்றிக் கொள்வார்” என்று ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு இயான் செப்பல் அறிவுரை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *