உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்த வீரரை கட்டாயம் தேர்ந்தெடுக்க வேண்டும் ; ரவி சாஸ்திரி ஓபன் டாக்…
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக கேஎல் ராகுலை தான் தேர்வு செய்ய வேண்டும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசியது இந்திய அணி. அபாரமான துவக்கத்தை பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு மிச்சல் மார்ஸ் 81 ரன்கள் 65 பந்துகளில் விலாசி, இந்திய பந்துவீச்சாளர்களை திக்குமுக்காட வைத்தார். ஆனால் சற்றும் சளைத்துவிடாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தினர் இந்திய பந்துவீச்சாளர்கள்.
குறிப்பாக, முகமது ஷமி மற்றும் ஜடேஜா இருவரும் மிடில் ஓவர்களில் வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்தினர். கடைசியில் சிராஜ் அபாரமாக பந்துவீச, 128/2இல் இருந்து 188 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆவதற்கு உதவினர்.
பார்ப்பதற்கு எளிய இலக்கு போல தெரிந்தாலும் இதை இந்திய அணி சேஸ் செய்வதற்கு சற்று கடினமாகவே இருந்தது. 39 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் நன்றாக ஆடிவந்த ஹர்திக் பாண்டியா 25 ரன்களில் அவுட்டாகியதால் 83 ரன்களுக்கு 5வது விக்கெட்டையும் இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். மிகவும் பொறுப்புடன் விளையாடிய கேஎல் ராகுல் 91 பந்துகளில் 75 ரன்கள் அடித்தார். இந்த அரைசதம் இந்திய அணிக்கும், தனிப்பட்ட முறையில் கேஎல் ராகுலுக்கும் உதவிகரமாக இருந்தது.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திர்க்கு பிறகு தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுத்துள்ள கே எல் ராகுலை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணி முன்னாள் தலைமை பயிர்ச்சியாளர் ரவி சாஸ்திரி தற்பொழுது விக்கெட் கீப்பிங் சிறப்பாக செயல்படும் கே எல் ராகுலை எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டும் என கே எல் ராகுலுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசுகையில் ரவி சாஸ்திரி தெரிவித்ததாவது, “கே எல் ராகுல் மிகச்சிறந்த முறையில் கீப்பிங் செய்துள்ளார். இதனால் இந்திய அணி தேர்வாளர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டியில் கே.எல் ராகுலை தேர்வு செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள், கே எல் ராகுல் ஒரு நாள் தொடர் மட்டுமில்லாமல் உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு தகுதியானவராக உள்ளார். அவரை நாம் மிடிலாடர் பேட்டிங்கில் பயன்படுத்திக் கொள்ளலாம், ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் களமிறக்கினால் அவர் இந்திய அணிக்காக உறுதுணையாக இருப்பார்.
குறிப்பாக இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கே.எல் ராகுல் கீப்பிங் செய்தால், சிறப்பாக இருக்கும் ஏனென்றால் அந்த மைதானத்தில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நாம் கீப்பிங் செய்ய வேண்டிய அவசியம் அதிகமாக இருக்காது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கே எல் ராகுல் நிச்சயம் இடம் பிடிப்பதற்கு அவருக்கான பல பரிட்சையாக மூன்று ஒரு நாள் போட்டிகளும் மற்றும் ஐபிஎல் தொடரும் உள்ளது அதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பார் என்று ரவி சாஸ்திரி ராகுலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.