இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஆரோன் பின்ச்;

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பின்ச் தனது அதிரடி ஆட்டத்திற்கு திரும்பும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு நெருக்கடியே.

உஸ்மான் கவாஜா;

முதல் போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணிக்கு தொல்லை கொடுத்த உஸ்மான் கவாஜா அடுத்தடுத்த போட்டிகளிலும் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

அலெக்ஸ் கேரி;

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி தனது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்பதே ஆஸ்திரேலிய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

சேன் மார்ஸ்;

முதல் போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்திய சேன் மார்ஸ் அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

ஹேண்ட்ஸ்கோம்ப்;

முதல் போட்டியில் அரைசதம் அடித்து மாஸ் காட்டிய இவரின் பொறுப்பான ஆட்டம் அடுத்த போட்டியிலும் தொடரும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு கூடுதல் நெருக்கடியே.

மார்கஸ் ஸ்டோனிஸ்;

ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டோனிஸ் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

கிளன் மேக்ஸ்வெல்;

அதிரடி ஆட்டக்காரரான கிளன் மேக்ஸ்வெல் தனது பழைய பார்மிற்கு திரும்பும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாதன் லயோன்;

சுழற்பந்து வீச்சில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் லயோன், ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரும் பலமே.

during the Victoria Bitter One Day International match between Australia and India at Manuka Oval on January 20, 2016 in Canberra, Australia.

பீட்டர் சிடில்;

அனுபவ வீரரான இவர் தனது பொறுப்பை உணர்ந்து விளையாடும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு கூடுதல் நெருக்கடியை கொடுக்கும்.

ரிச்சர்ட்சன்;

முதல் போட்டியில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய ரிச்சர்ட்சன், அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

பெஹண்ட்ரூஃப்;

அனுபவ வீரரான இவர் தனது பங்களிப்பை சரியாக செய்யும் பட்சத்தில் அது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலமே. • SHARE

  விவரம் காண

  எதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா? மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!

  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முடிய இங்கிலாந்து அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் அம்பலமாகிப் போயுள்ளது. பாகிஸ்தானிடம் வாங்கிய...

  இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்!

  இலங்கைக்கு எதிராக தோல்வி தழுவி அரையிறுதி வாய்ப்பையும் நழுவ விட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு உத்வெகமூட்டக்கூடிய செய்தியாக அந்த...

  வீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்!

  இங்கிலாந்து - வேல்ஸ் நகரங்களில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றது ஆஸ்திரேலியா....

  நான் பயந்தேனா..? கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் !!

  நான் பயந்தேனா..? கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் ஸ்டார்க்கின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயான் மோர்கன் அச்சப்பட்டதாக கூறிய கெவின் பீட்டர்சனுக்கு இயான்...

  1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி !!

  1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி உலகக் கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த...