நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி; வெல்லப்போவது யார்..?

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா சதமும், டோனி அரைசதமும் அடித்தனர்.

MS Dhoni was given out LBW in the 33rd over for 51, but TV replays showed that the ball had pitched outside the leg-stump.

தவான், அம்பதி ராயுடு டக்அவுட் ஆனார்கள். விராட் கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக்கும் பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை. இதனால் பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அதேபோல் சுழற்பந்து வீச்சாளரான சாஹலும் பயிற்சியில் ஈடுபட்டார்.

முதல் போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், 10 ஓவரில் 46 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பயிற்சியாளருடன் ஷமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை உயிரோட்டமாக வைத்துக்கொள்ளப்படும். இதனால் 2-வது இந்தியாவிற்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இதனால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ஜடேஜா மற்றும் கலீல் அஹமது நீக்கப்படலாம் என தெரிகிறது. அவர்களுக்கு பதிலாக சாஹல் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் களமிறக்கப்படலாம் என தெரிகிறது.

அதே வேளையில், முதல் போட்டியில் வென்றுள்ள தைரியத்தில் ஆஸ்திரேலிய அணி தனது அணியில் எந்த மாற்றமும் இல்லாமல், முதல் போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடனே இரண்டாவது போட்டியிலும் களம் காண அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

முதல் போட்டியில் சந்தித்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி, தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் நாளைய போட்டியில் களம் காண உள்ளதால் இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இரு அணிகள் இடையேயான பலம், பலவீனம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி;

ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, அம்பத்தி ராயூடு, தோனி, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்,முகமது ஷமி.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான  உத்தேச ஆஸ்திரேலிய அணி;

ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), சேன் மார்ஸ், ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளன் மேக்ஸ்வெல், நாதன் லயோன், பீட்டர் சிடில், ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹண்ட்ரூஃப். • SHARE

  விவரம் காண

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...

  பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல !!

  பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல மெல்போர்னில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய...

  தோனியை பாராட்டிய பிராக் லெஸ்னரின் மேனேஜர்!!

  Eat..Sleep.. Conquer..Repeat என்னும் பிராக் லெஸ்னரின் கோட்பாடுகளை போலவே தோனி Eat..Sleep.. Finsih Game..Repeat  செய்கிறார் என அவரின் மேனேஜர் ஐசிசி கிரிக்கெட்...

  உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும்: சவுரவ் கங்குலி

  உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார். 3 மாதங்களுக்குப் பிறகு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த தோனி...