எனக்கெல்லாம் பும்ரா பவுலிங் பேபி பவுலிங் மாதிரி; சாஹின் அப்ரிடி அளவுக்கு துளியும் வரமுடியாது - முன்னாள் பாகிஸ்தான் வீரர் சவடால் பேச்சு! 1

பும்ரா எந்தவகையிலும் சாஹின் அப்ரிடிக்கு நிகராக வரமுடியாது என பேசியுள்ளார் அப்துல் ரசாக்.

சமகால கிரிக்கெட்டில் சிறந்த பவுலர்களாக பார்க்கப்பட்டு வருபவர்கள், பாகிஸ்தானை சேர்ந்த சாஹின் அப்ரிடி மற்றும் இந்தியாவை சேர்ந்த இந்த ஜஸ்பிரித் பும்ரா. இருவரும் மூன்று வித போட்டிகளிலும் பந்துவீச்சின் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருக்கின்றனர்.

எனக்கெல்லாம் பும்ரா பவுலிங் பேபி பவுலிங் மாதிரி; சாஹின் அப்ரிடி அளவுக்கு துளியும் வரமுடியாது - முன்னாள் பாகிஸ்தான் வீரர் சவடால் பேச்சு! 2

சமீபகாலமாக இருவருமே அவ்வபோது காயம் ஏற்பட்டு சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. பும்ரா செப்டம்பர் மாதத்தில் இருந்து சர்வதேச போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. சாஹின் அப்ரிடி 3 மாதகாலம் காயத்திற்கு பின் டிசம்பர் மாதத்தில் இருந்து விளையாடி வருகிறார்.

எனக்கெல்லாம் பும்ரா பவுலிங் பேபி பவுலிங் மாதிரி; சாஹின் அப்ரிடி அளவுக்கு துளியும் வரமுடியாது - முன்னாள் பாகிஸ்தான் வீரர் சவடால் பேச்சு! 3

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக், தற்போது பாகிஸ்தான் அணி நிர்வாகத்தின் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்தாண்டு 50-ஓவர் உலகக்கோப்பை வரை உறுப்பினர் பதவியில் இருக்கவுள்ள இவர் சமீபத்தில் பாகிஸ்தான் வீரர்களின் செயல்பாடு பற்றி பேசினார். அப்போது பும்ரா மற்றும் சாஹின் அப்ரிடி இருவரையும் ஒப்பிட்டு பேசியபோது சில கருத்துக்களை முன் வைத்தார்.

“சாஹின் அப்ரிடி பல வகைகளில் பும்ராவை விட மிகச்சிறந்த பந்துவீச்சாளர். எந்த வகையிலும் சாஹினுக்கு நிகராக பும்ரா வர முடியாது.” என்றார்.

எனக்கெல்லாம் பும்ரா பவுலிங் பேபி பவுலிங் மாதிரி; சாஹின் அப்ரிடி அளவுக்கு துளியும் வரமுடியாது - முன்னாள் பாகிஸ்தான் வீரர் சவடால் பேச்சு! 4

அப்துல் ரசாக் பும்ராவை பற்றி இப்படி பேசுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது பும்ராவை “பேபி பவுலர்” என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இதற்காக கடும் எதிர்ப்பையும் அப்துல் ரசாக் சந்தித்தார்.

“நான் எனது காலகட்டத்தில் கிளென் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு இருக்கிறேன். அவர்களை ஒப்பிடும்போது பும்ரா எனக்கு பேபி பவுலர். எந்த வகையிலும் என்னை அவர் அச்சுறுத்த முடியாது. அவரது பந்துவீச்சை எளிதாக என்னால் அடிக்க முடியும். ஆதிக்கமும் செலுத்த முடியும்.” என 2019 ஆம் ஆண்டு அப்துல் ரசாக் பேசினார்.

தற்போது மீண்டும் ஒருமுறை பும்ராவை பாகிஸ்தான் பவுலருடன் ஒப்பிட்டு பும்ராவின் திறமைகளை தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *