அடக்கொடுமையே... ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டத்தால் மிக மோசமான சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி !! 1

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் 208 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்ததன் மூலம் இந்திய அணி மோசமான வரலாறு ஒன்றை பதிவு செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

அடக்கொடுமையே... ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டத்தால் மிக மோசமான சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி !! 2

இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 71* ரன்களும், கே.எல் ராகுல் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகளையும், ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அடக்கொடுமையே... ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டத்தால் மிக மோசமான சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி !! 3

இதன்பின் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமிரான் க்ரீன் 30 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து கொடுத்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் (1), இங்லீஸ் (17) ஆகியோர் பெரிதாக ரன் குவிக்காவிட்டாலும், அடுத்ததாக கூட்டணி சேர்ந்த டிம் டேவிட் – மேத்யூ வேட் ஜோடி இந்திய அணியின் அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்தது. டிம் டேவிட் 18 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத மேத்யூ வேட் 21 பந்துகளில் 45* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 19.2 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

அடக்கொடுமையே... ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டத்தால் மிக மோசமான சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி !! 4

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த போட்டியில் 208 ரன்கள் குவித்தும் தோல்வியடைந்ததன் மூலம் இந்திய அணி மோசமான வரலாறு ஒன்றிலும் இடம்பிடித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 211 ரன்கள் குவித்தும் தோல்வியடைந்த இந்திய அணி, தற்போது ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக 200+ ரன்கள் குவித்தும் தோல்வியடைந்ததன் மூலம், சொந்த மண்ணில் நடைபெற்ற டி.20 போட்டிகளில் ஒரே ஆண்டில் இரண்டு முறை 200+ ரன்கள் குவித்தும் தோல்வியடைந்த ஒரே அணி என்ற மோசமான வரலாற்றில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published.