புஜாராவின் விக்கெட்டுக்காக டிஆர்எஸ் கேட்ட டிம் பெய்னுக்கு 15% அபராதம் ! 1

புஜாராவின் விக்கெட்டுக்காக டிஆர்எஸ் கேட்ட டிம் பெய்னுக்கு 15% அபராதம் ! 

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் நடுவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முடிவடைந்துள்ள நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றதால் 1-1 என சமநிலையில் இருக்கிறது.

புஜாராவின் விக்கெட்டுக்காக டிஆர்எஸ் கேட்ட டிம் பெய்னுக்கு 15% அபராதம் ! 2

இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் சிட்னி மைதானத்தில் நடைபெறு வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் குவித்தது. இதையடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி 95 ரன்கள் முன்னிலை வகித்தது. இதை அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

புஜாராவின் விக்கெட்டுக்காக டிஆர்எஸ் கேட்ட டிம் பெய்னுக்கு 15% அபராதம் ! 3

407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி. இந்த மிகப்பெரிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை குவித்து ட்ரா செய்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்னுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

முதல் இன்னிங்ஸின் போது புஜாராவின் விக்கெட் சந்தேகமாக இருந்ததால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்  டிம் பெய்ன் டிஆர்எஸ் கேட்டார். இதற்கு 3வது நடுவர் இந்திய அணிக்கு சாதகமாக கூறினார். அப்போது  டிம் பெய்ன் நடுவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. மேட்ச் ரெப்ரி டேவிட் பூன் போட்டியிலிருந்து தடை செய்வதற்கான ஒரு புள்ளியை கொடுத்துள்ளார்.

புஜாராவின் விக்கெட்டுக்காக டிஆர்எஸ் கேட்ட டிம் பெய்னுக்கு 15% அபராதம் ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *