பும்ராவை பத்தி பேசாதீங்க ப்ளீஸ்... யூஸ் ஒன்னும் இல்ல - சட்டென்று கடுப்பான ரோகித் சர்மா! 1

பும்ராவை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அவரைப் பற்றி யோசிக்கவும் வேண்டாம் என்று சமீபத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காட்டமாக பேசியுள்ளார் ரோகித் சர்மா.

ஜஸ்பிரித் பும்ரா, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்று பின்னர் விலகினார்.

பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய அகடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி பெற்றுவந்த பும்ரா, கடந்த டிசம்பர் மாதம் குணமடைந்துவிட்டார் என்று பிசிசிஐ-க்கு அறிக்கை கொடுக்கப்பட்டது.  ஆனாலும் தேர்வுக்குழுவினர் இவரது உடல்நிலை விஷயத்தில்  இம்முறை அவசரம் காட்டவேண்டாம் என்று பொறுமையாக இருந்தனர். இலங்கை, நியூசிலாந்து, தற்போது நடந்துவரும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் எடுக்கவில்லை.

பும்ராவை பத்தி பேசாதீங்க ப்ளீஸ்... யூஸ் ஒன்னும் இல்ல - சட்டென்று கடுப்பான ரோகித் சர்மா! 2

தேர்வுக்குழுவின் இத்தகைய முடிவு மிகச்சரியானதாக அமைந்தது. ஏனெனில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த பும்ராவிற்கு பிப்ரவரி மாதம் கடைசியில் மீண்டும் காயம் ஏற்பட்டது. பும்ராவை பரிசோதித்த மருத்துவர்கள், காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இம்மாதம் முதல் வாரம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பும்ரா, தற்போது மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். இவரால் அடுத்த எட்டு மாதங்களுக்கு எந்தவித விளையாட்டிலும் ஈடுபட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

பும்ராவை பத்தி பேசாதீங்க ப்ளீஸ்... யூஸ் ஒன்னும் இல்ல - சட்டென்று கடுப்பான ரோகித் சர்மா! 3

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. அதன் பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேப்டன் ரோகித் சர்மா ஈடுபட்டபோது, இதுபோன்ற குறைந்த ஸ்கோர்களை கட்டுப்படுத்தும்போது பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களை இந்திய அணி மிஸ் செய்கிறதா? என்று நிருபர் கேள்வி எழுப்பினார். அப்போது பதில் கூறிய ரோகித் சர்மா,

பும்ராவை பத்தி பேசாதீங்க ப்ளீஸ்... யூஸ் ஒன்னும் இல்ல - சட்டென்று கடுப்பான ரோகித் சர்மா! 4

“அடுத்த எட்டு மாதங்களுக்கு பும்ரா இருக்கமாட்டார். தற்போது இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். பும்ரா இடத்தை நிரப்புவது கடினம் என்றாலும், ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து வருகின்றனர். இனி பும்ரா பற்றி நாம் பேசி எந்த பயனுமில்லை. ஆகையால் இனிமேல் அவரைப் பற்றிய கேள்விகளை எழுப்ப வேண்டாம். நாம் யோசிக்கவும் வேண்டாம். பும்ரா நன்றாக குணமடைந்து வரட்டும்.” என்று சற்று காட்டமாக நிருபர்களுக்கு அறிவுறுத்தினார் ரோகித் சர்மா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *