யுஸ்வேந்திர சாஹல் இனி வேலைக்கு ஆக மாட்டார்... இந்த பையனுக்கு இப்பவே வாய்ப்பு கொடுத்திடுங்க; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர் !! 1

யுஸ்வேந்திர சாஹலை மட்டும் நம்பி இந்திய அணி டி.20 உலகக்கோப்பையை எதிர்கொள்வது இந்திய அணிக்கே பெரிய பிரச்சனையாக அமையலாம் என முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இந்திய வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

யுஸ்வேந்திர சாஹல் இனி வேலைக்கு ஆக மாட்டார்... இந்த பையனுக்கு இப்பவே வாய்ப்பு கொடுத்திடுங்க; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர் !! 2

இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 208 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 208 ரன்கள் குவித்தாலும், பந்துவீச்சில் மிக மிக மோசமாக செயல்பட்டதால் இந்திய அணி இந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது.

யுஸ்வேந்திர சாஹல் இனி வேலைக்கு ஆக மாட்டார்... இந்த பையனுக்கு இப்பவே வாய்ப்பு கொடுத்திடுங்க; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர் !! 3

முதல் டி.20 போட்டியில் மிரட்டல் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி 23ம் தேதி நடைபெற உள்ளது. இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக முக்கியமானது என்பதால் இந்த போட்டி மீது மிக அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி.20 போட்டி குறித்தும், இரு அணிகள் இடையேயான நடப்பு டி.20 தொடர் குறித்தும் பல்வேறு விசயங்களை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நடப்பு டி.20 தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர், யுஸ்வேந்திர சாஹலை மட்டும் நம்பி இந்திய அணி டி.20 உலகக்கோப்பையை எதிர்கொள்வது சரியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.

யுஸ்வேந்திர சாஹல் இனி வேலைக்கு ஆக மாட்டார்... இந்த பையனுக்கு இப்பவே வாய்ப்பு கொடுத்திடுங்க; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர் !! 4

இது குறித்து வாசிம் ஜாபர் பேசுகையில், “யுஸ்வேந்திர சாஹலின் பந்துவீச்சு தற்போது பெரிதாக எடுபடுவது இல்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் சாஹலை மட்டுமே முழுமையாக நம்பி இந்திய அணி டி.20 உலகக்கோப்பையை எதிர்கொள்ள உள்ளது சரியானது அல்ல. யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக ரவி பிஸ்னோய்க்கு இந்திய அணி வாய்ப்பு கொடுக்க வேண்டும். ரவி பிஸ்னோய்க்கு வாய்ப்பு கொடுத்தால் அவர் நிச்சயம் ஒவ்வொரு போட்டியிலும் சில விசயங்களை மாற்றி கொடுப்பார், சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கூட ரவி பிஸ்னோய் சிறப்பாகவே பந்துவீசினார். அஸ்வினும் இந்திய அணியில் உள்ளார், ஆனால் என்னை பொறுத்தவரையில் இந்திய அணி ரவி பிஸ்னோய் மற்றும் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், சாஹல் இதே போன்று டி.20 உலகக்கோப்பையிலும் பந்துவீசினால் அது நிச்சயம் இந்திய அணிக்கு பெரும் பிரச்சனையை கொடுக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.