ஐந்து பந்துவீச்சாளர்கள் போதும்... இந்த பையனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க; இந்திய அணிக்கு முன்னாள் வீரர் கோரிக்கை !! 1
ஐந்து பந்துவீச்சாளர்கள் போதும்… இந்த பையனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க; இந்திய அணிக்கு முன்னாள் வீரர் கோரிக்கை

வங்கதேச அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இஷான் கிஷனிற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

வங்கதேச அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வெறும் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி, பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், கடைசி ஒரு விக்கெட்டை கைப்பற்ற தவறியதால் இந்திய அணி முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய அணி

இந்திய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி 7ம் தேதி நடைபெற உள்ளது.

இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா வங்கதேசம் இடையேயான நடப்பு தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஐந்து பந்துவீச்சாளர்கள் போதும்... இந்த பையனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க; இந்திய அணிக்கு முன்னாள் வீரர் கோரிக்கை !! 2

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால் போதும் என்பதே எனது கருத்து. அதிகமான பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால் யாரை எந்த இடத்தில் பயன்படுத்துவது என்ற தேவையற்ற குழப்பம் ஏற்படும். கடந்த போட்டியிலும் இதன் காரணமாக 2 விக்கெட் எடுத்த வாசிங்டன் சுந்தருக்கு வெறும் 5 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். இரண்டாவது போட்டிக்கான ஆடும் லெவனில் ஐந்து பந்துவீச்சாளர்களுக்கு இடம் கொடுத்தால் போதும். இஷான் கிஷனிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கலாம். கடந்த போட்டியில் கே.எல் ராகுல் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினார், எனவே இஷான் கிஷனை விக்கெட் கீப்பராக பயன்படுத்தி கொள்ளலாம். அதே போல் மூன்றாவது வரிசையில் அவரை களமிறக்கினால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் பலம் கிடைக்கும், அவரால் ஷாகிப் அல் ஹசன் போன்ற வீரர்களை சமாளித்து விளையாட முடியும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *