இந்திய அணி
இஷான் கிஷனிற்கு இடம் கிடைக்குமா..? இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இது தான்

வங்கதேச அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

வங்கதேச அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வெறும் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி, பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், கடைசி ஒரு விக்கெட்டை கைப்பற்ற தவறியதால் இந்திய அணி முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இஷான் கிஷனிற்கு இடம் கிடைக்குமா..? இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 1

இந்திய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி 7ம் தேதி நடைபெற உள்ளது.

முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும், இரண்டாவது போட்டிக்கான ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றம் செய்ய நினைத்தால் சபாஷ் அஹமத் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்‌ஷர் பட்டேல் ஆடும் லெவனில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

இஷான் கிஷனிற்கு இடம் கிடைக்குமா..? இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 2

பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரே இடம்பெறுவார்கள். விக்கெட் கீப்பராக கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் கே.எல் ராகுலே செயல்படுவார்.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் சபாஷ் அஹமத், வாசிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. பந்துவீச்சாளர்கள் வரிசையில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் சென் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல், வாசிங்டன் சுந்தர், சபாஷ் அஹமத், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், குல்தீப் சென்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *