வீடியோ; உலகக்கோப்பையிலும் வாய்ப்பு கிடைக்காது போல… மீண்டும் சொதப்பிய சூர்யகுமார் யாதவ்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதின.
இந்திய அணி இறுதி போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றதாலும், வங்கதேச அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை முன்பே இழந்துவிட்டதாலும் இந்த போட்டி அதிக முக்கியத்துவம் இல்லாத போட்டியாக பார்க்கப்பட்டது. இதனால் வங்கதேச அணிக்கு எதிரான இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ஐந்து பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டது. விராட் கோலி, பும்ராஹ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பிரசீத் கிருஷ்ணா, திலக் வர்மா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணிக்கு அந்த அணியின் கேப்டனான ஷாகிப் அல் ஹசன் 80 ரன்களும், தவ்ஹீத் ஹிர்தாய் 54 ரன்களும், நசும் அஹமத் 44 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 265 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\
இதன்பின் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்க்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய திலக் வர்மா (5), கே.எல் ராகுல் (19) , இஷான் கிஷன் (7), சூர்யகுமார் யாதவ் (26) மற்றும் ரவீந்திர ஜடேஜா (7) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மறுமுனையில் நீண்ட நேரம் தனி ஆளாக போராடிய சுப்மன் கில் சதம் அடித்ததோடு, மொத்தம் 133 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை இழந்த வீடியோ;
— No-No-Crix (@Hanji_CricDekho) September 15, 2023
கடைசி நேரத்தில் முடிந்தவரை போராடிய அக்ஷர் பட்டேல் 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தாலும் 19வது ஓவரில் விக்கெட்டை இழந்ததன் மூலம் 49.5 ஓவரில் 259 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.
பந்துவீச்சில் வங்கதேச அணி சார்பில் அதிபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், தன்சிம் ஹசன் மற்றும் மெஹ்தி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.