பந்துவீச்சாளராக மாறி இந்திய அணியை பழி தீர்த்த இங்கிலாந்து கேப்டன் !! 1

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 145 ரன்களில் சுருண்டுள்ளது.

இந்தியா வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

பந்துவீச்சாளராக மாறி இந்திய அணியை பழி தீர்த்த இங்கிலாந்து கேப்டன் !! 2

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, அக்‌ஷர் பட்டேலின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் (11), புஜாரா (0), கோலி (27) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தாலும், ரோஹித் சர்மா பொறுமையாக விளையாடியதால் நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது.

பந்துவீச்சாளராக மாறி இந்திய அணியை பழி தீர்த்த இங்கிலாந்து கேப்டன் !! 3

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இங்கிலாந்து அணியே கையே ஓங்கி இருந்தது. குறிப்பாக அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோ ரூட் பந்துவீச்சில் இந்திய அணியை திணறடித்து வெறும் 6 ஓவரில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதன் மூலம் வெறும் 145 ரன்களுக்கே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

பந்துவீச்சாளராக மாறி இந்திய அணியை பழி தீர்த்த இங்கிலாந்து கேப்டன் !! 4

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும், ஜேக் லீச் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *